கும்பகோணம், டிச. 30 –

மண் வளம் காக்க விழிப்புணர்வு சைக்கிள் பேரணி மகாராஷ்டிரா மாநிலம் உதய் கிரியிலிருந்து கன்னியாகுமரி வரை 1600 கி.மீ. பயணம் மேற்கொண்டு குத்மகோணம் வந்தடைந்தவர்களை நேற்று ஈஷா பவுண்டேஷன் சார்பில் கும்பகோணத்தில் வரவேற்பு அளித்தனர்.

மண் வளம் காக்க சைக்கிள் விப்புணர்வு பேரணி மகாராஷ்டிரா மாநிலத்திலிருந்து கடந்த 19ம் தேதி தொடங்கிய சைக்கிள் யாத்திரை நேற்று இரவு அசூர் புறவழிச் சாலையில் வந்தடைந்தனர். சைக்கிள் யாத்திரை வந்தவர்களை கவுரவிக்கும் விதமாக அவர்களுக்கு  ஈஷா யோகா பவுண்டேஷன் சார்பில் ரவி சங்கர் செந்தில் ராஜா, பில் கெனான் ஆகியோர் மாலை அணிவித்து  வரவேற்பு அளித்தனர்.

இந்த விழிப்புணர்வு யாத்திரை குறித்து அவர்கள் கூறுகையில், ரசாயன உரங்கள் இன்றி இயற்கை முறையில் விவசாயம் செய்து மண் வளத்தை காக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தும் விதமாக மகாராஷ்டிரா உதய்கிரியிலிருந்து கன்னியாகுமரி வரை இந்த ரத யாத்திரை மேற்கொண்டு உள்ளோம். தினமும் சராசரியாக 130 கிலோமீட்டர் வரை சைக்கிளில் பயணம் செய்கிறோம் என்றும், இப்பயணம் மொத்தம் சுமார் 1600 கிலோ மீட்டர் வரை பயணத்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சைக்கிளில் 25 பேர் கொண்ட குழுவினர் விழிப்புணர்வு பயணம் மேற்கொண்டுள்ளோம். இந்த பேரணி ஆந்திரா, திருப்பதி சென்று அங்கிருந்து கும்பகோணம், தஞ்சாவூர், புதுக்கோட்டை, மதுரை, திருநெல்வேலி வழியாக விரைவில் இப்பேரணி வரும்  2ம் தேதி கன்னியாகும்மரியை சென்றடைய திட்டமிட்டுள்ளோம் என்று தெரிவித்தனர். இந்த விழிப்புணர்வு பயணத்திற்கு ஈஷா யோகா பவுண்டேஷன்  உறுதுணையாக இருந்து வருகிறார்கள் என்றார்கள்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here