கும்பகோணம், பிப். 18 –

தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ் …

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகரம், திருவலஞ்சுழியில் இன்று பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம் சார்பில் கலைஞரின் நூற்றாண்டு விழா … 100 நபர்களுக்கு 100 லட்சம் மதிப்பீட்டில் கறவை மாடுகளுக்கான கடன் வழங்கல் மற்றும் கூட்டுறவு பால் சங்கம் திறப்பு விழா என முப்பெரும் விழா நடைப்பெற்றது.

திருவலஞ்சுழி பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம், தொடக்க விழா மற்றும் கலைஞரின், நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு 100 நபர்களுக்கு ரூ. 100 லட்சம் மதிப்பீட்டிலான கறவை மாடு வாங்குவதற்கு கடன் வழங்கும் நிகழ்ச்சி என முப்பெரும் விழா சட்டமன்ற உறுப்பினர் அன்பழகன், தலைமையில் நடைபெற்றது.

மேலும் அவ்விழாவில் மாநிலங்களவை உறுப்பினரும் மாவட்ட செயலாளருமான கல்யாணசுந்தரம், கலந்து கொண்டு கூட்டுறவு பால் சொசைட்டியை திறந்து வைத்து குத்து விளக்கு ஏற்றி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.

அச் சிறப்பு மிகு விழாவில் திருவலஞ்சுழி பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கம் தலைவர் குருசாமி, மாவட்ட துணை செயலாளர் கோவி. அய்யாராசு, ஒன்றிய அவைத் தலைவர் லோகநாதன், ஒன்றிய பொருளாளர் இளங்கோவன், வட்டார வளர்ச்சி ஆணையர் ஆனந்தராஜ், வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜரத்தினம், மாவட்ட தொழில் மையம் கண்காணிப்பாளர் கார்த்திகேயன், ஆவின் பால் பொது மேலாளர் சரவணகுமார், இந்தியன் வங்கி மேலாளர் சரவணன், பால் வளம் துணை பதிவாளர் விஜயலட்சுமி, கால்நடை மருத்துவர் கார்த்திகேயன், ஒன்றிய குழு உறுப்பினர்கள் செல்வம், சுப்பு அறிவழகன், மற்றும் நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்று விழாவினை சிறப்பித்தனர்.

அதனைத் தொடர்ந்து 100 நபர்களுக்கு தலா ஒரு லட்சம் வீதம் 100 லட்சம் மதிப்பீட்டில் கறவை மாடுகள் வாங்குவதற்கான கடன் வழங்கப்பட்டது. மேலும் அக்கடனில் அரசு மானியமாக ரூ. 35,000 தருவதாக அறிவிக்கப்பட்டள்ளது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here