pic file copy

பொதட்டூர்பேட்டை, மார்ச். 04 –

திருவள்ளூர் மாவட்டம் பொதட்டூர்பேட்டை காவல்நிலைய சரகத்திற்கு உட்பட் பகுதியில், பக்தவச்சலம் என்பவரின் மகன் இந்திரன் வசித்து வருகிறார்.

இவரின் தம்பி செல்வம் என்பவரின் மகனான பத்து வயது சிறுவன் திருநாவுக்கரசு என்பவர் கடந்த மார்ச் 2 ஆம் தேதியன்று கடைக்கு சைக்கிளில் சென்று பொருட்களை வாங்கிக் கொண்டு, வீடு திரும்பி வரும் போது, காஞ்சிபுரம் தெரு அருகே வேகமாகவும் கவனக்குறைவாகவும் டிராக்டரை ஓட்டிவந்த ஓட்டுநர் திருநாவுக்கரசின் சைக்கிளில் மோதி விபத்தை ஏற்படுத்திவுள்ளார். அவ்விபத்தில் சைக்கிளில் வந்துக் கொண்டிருந்த நிலைதடுமாறி கீழ் விழுந்து தலை, முகம் மற்றும் உடல்களில் பலத்தக் காயங்கள் ஏற்பட்டு வலியில் துடித்த அவரை திருத்தணி பீகாக் மருத்துவமனையில் முதல் வகை சிகிச்சை அளிக்கப்பட்டு, தொடர் மற்றும் மேல்சிகிச்சைக்காக போரூரில் உள்ள இராமசந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சப்பெற்று வந்த நிலையில் அதிகப்பட்ச சிகிச்சைக்காக சென்னை எக்மோரில் உள்ள அரசு குழந்தைகள் மருத்துவமனையில் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை நடைப்பெற்று வருகிறதெனவும், மேலும் இவ்விபத்த்தினை ஏற்படுத்திய டிராக்டர் ஓட்டுநர் மீது சட்டநடவடிக்கை எடுக்கும் படியும் திருநாவுக்கரசின் பெரியப்பா இந்திரன் நேற்று மார்ச் 3 ஆம் தேதியன்று பொதட்டூர்பேட்டை காவல் நிலையத்தில் புகார் மனு அளித்துள்ளார். அதனடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து வாகனத்தையும் பறிமுதல் செய்து மேற்கொண்ட சட்டநடவடிக்களை மேற்கொண்டு  வருகின்றனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here