ராமநாதபுரத்தில் பாஜ வேட்பாளர் நயினார் நாகேந்திரனை 2 லட்சம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்வேன்
தமிழக அமைச்சர் டாக்டர் மணிகண்டன் சூளுர
ராமநாதபுரம், மார்ச்.
ராமநாதபுரம் மாவட்டத்தின் மக்கள் பிரச்னைகளை ஓடோடி வந்து தீர்த்து வைத்த மண்ணின் மைந்தன் தமிழக தகவல் தொழில் நுட்பவியல் துறை அமைச்சர் டாக்டர் மணிகண்டன் ராமநாதபுரம் தொகுதியில் பாஜ வேட்பாளரை 2 லட்சம் ஒட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்வேன் என சூளுரைத்து கடும் பணியாற்றி வருகிறார்.
ராமநாதபுரம் நாடாளுமன்ற மக்களவை தொகுதியில் அதிமுக கூட்டணியின் பாஜ வேட்பாளர் நயினார் நாகேந்திரனை ஆதரித்து நடந்த கூட்டத்தில் மத்திய ரயில்வே அமைச்சர் பியூஸ் கோயல் பங்கேற்றார். கூட்டத்தில் ராமநாதபுரம் எம்பி அன்வர்ராஜா, சுகாதார துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பங்கேற்று பேசினர். கூட்டத்தில் ராமநாதபுரம் தொகுதியின் மண்ணின் மைந்தர் தமிழக தகவல் தொழில் நுட்பவியல் துறை அமைச்சர் டாக்டர் மணிகண்டன் பேச ஆரம்பித்த போதே கூட்டத்தில் தொண்டர்கள் ஆரவாரத்துடன் மண்ணின் மைந்தர் கை காட்டுபவரே எங்கள் வெற்றி வேட்பாளர் என கோஷம் எழுப்பினர். அதற்கு நடுவில் அமைச்சர் டாக்டர் மணிகண்டன் பேசுகையில், ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் நயினார் நாகேந்திரன் எனது உறவினர். அம்மா அரசும் பாரத பிரதமர் மோடி அரசும் தற்போது கூட்டணி அமைத்துள்ளது. மும்பையில் தாக்குதல் நடந்த போது காங்கிரஸ் கட்சியால் ஒன்றும் செய்ய முடியவில்லை. ஆனால் பாஜவின் மோடி அரசு தற்போது பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளுக்கு தகுந்த எச்சரிக்கை விடுத்தது போல் அதிரடியான நடவடிக்கை எடுத்தது நாட்டு மக்கள் இடையே அமோக ஆதரவு கிடைத்துள்ளது. புரட்சி தலைவி அம்மாவிற்கு பின் ஒப்பிட முடியாத அளவில் மிக சிறந்த தலைவர் பிரதமர் மோடி. நமது ராமநாதபுரம் தொகுதியில் மருத்துவ கல்லுாரி கொண்டு வருவதற்கும், உச்சிப்புளியில் விமான நிலையம் உருவாக்கு வதற்கும் நான் பல முறை கோரிக்கை விடுத்ததின் பேரில் தற்போது அவைகள் நிறை வேற்றும் நிலையில் உள்ளன. மீனவர்கள் ஆயிரத்து 900 பேர் விடுதலைக்கு நமது முயற்சியால் மத்திய அரசு நடவடிக்கை எடுத்து விடுவிக்கப் பட்டுள்ளனர். இது மட்டுமின்றி 5 மீனவர்கள் துாக்கு தண்டனையை ரத்து செய்வதற்கு புரட்சி தலைவி அம்மா எடுத்த முயற்சிதான் இலங்கை அரசு தூக்குத் தண்டனையை ரத்து செய்து விடு வித்தது. மீனவர்கள் பிரச்னை முதல் நெசவாளர்கள் பிரச்னை என எதுவானாலும் நாங்கள் உடனடியாக குரல் கொடுக்கிறோம் மத்திய அரசு தகுந்த நடவடிக்கை எடுத்து கடந்த 5 ஆண்டுகளில் மீனவர்கள் பாதிப்பு ஏதும் நடைப் பெறவில்லை. இவைகளையும் தாண்டி தற்போதுள்ள வேட்பாளர் நயினார் நாகேந்திரன் வெற்றி பெற்றால் பாஜ அறிவித்துள்ள புதிய துறையான மீனவர் நலத்துறை நமது வெற்றி வேட்பாளர் நயினார் நாகேந்திரன் அமைச்சராக பொறுப் பேற்க வாய்ப்பு உள்ளது. நான் இந்த மண்ணில் பிறந்தவன் என்ற முறையில் நான்கு சட்ட சபை தொகுதி மக்களையும் பார பட்சமின்றி சனி, ஞாயிறு மற்றும் நேரம் கிடைக்கும் போதெல்லாம் நேரில் சென்று மக்களை சந்தித்து எந்தவித பிரச்சனை யென்றாலும் தீர்த்து வைத்து வருகிறேன். இதுவரை 30 ஆண்டுகளுக்கு மேலாக அரசியல்வாதிகள் செல்லாத திருப்புல்லாணி ஒன்றியத்திற் குட்பட்ட கிராமத்திற்கு சென்ற போது மக்கள் அமோக வரவேற்பு அளித்தனர். அவர்களுடன் தரையில் அமர்ந்து அவர்கள் குறைகளை கேட்டு தீர்த்து வைத்துள்ளேன். இது மட்டுமின்றி 40 ஆண்டு கால வரலாற்று சரித்திரத்தில் இதுவரை யாரும் சாதிக்காத வகையில் வைகை தண்ணீர் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊரணிகள், கண்மாய்கள் நிரம்பி கோடை காலத்தில் தண்ணீர் பிரச்னை இல்லாத வகையில் வழி செய்துள்ளேன். எனது வீடு மக்களுக்காக திறந்தே இருக்கும் எப்போது வேண்டு மென்றாலும் மக்கள் வந்து என்னை எளிதில் சந்திக்கலாம் அந்த வகையில் அம்மாவால் நான் அறிமுகம் செய்யப் பட்டு மக்கள் பணி யாற்றுகிறேன். அந்த வகையில் எனது மாவட்டத்தில் உள்ள மக்கள் எங்களது கூட்டணியான பாஜவிற்கு அமோக ஆதரவு அளித்து 2 லட்சம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்வது உறுதி
இவ்வாறு அமைச்சர் டாக்டர் மணிகண்டன் பேசினார்.
கூட்டத்தில் மத்திய ரயில்வே அமைச்சர் பியூஸ் கோயல், அதிமுக மாவட்ட செயலாளர் முனியசாமி, பாஜ மாநில துணை தலைவர் குப்புராம், மாவட்ட தலைவர் முரளிதரன் உட்பட கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலரும் பங்கேற்றனர்.
முகப்பு மாவட்டம் ராமநாதபுரம் ராமநாதபுரத்தில் பாஜ வேட்பாளர் நயினார் நாகேந்திரனை 2 லட்சம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்வேன்...