கும்பகோணம், டிச. 20 -.

கும்பகோணத்தில் அகில இந்திய எல்ஐசி முகவர்கள் சங்கம் மற்றும் லிகாய் முகவர்கள் சங்கம் சார்பில் 15% லேப்சேஷனை 10% ஆக குறைப்பதை எதிர்த்து நிறுத்தி வைத்தது.

குறைந்தபட்ச வணிக விதியினை மாற்றியமைத்தது 50,000 மாக இருந்த குழு காப்பீட்டை 12 லட்சமாக உயர்த்தியது. மேலும், பீமா சுகம் போன்ற பல கோரிக்கைகளை முன்வைத்து தொடர்ந்து போராடியது ஹைதராபாத்IRDAI தர்ணா போராட்டத்தில் கலந்து கொண்ட முகவர்களுக்கு நன்றி முகவர்களின் கோரிக்கை ஏற்று பாராளுமன்றத்தில் எடுத்துரைத்த பாராளுமன்ற உறுப்பினருக்கு நன்றி தெரிவித்தனர்.

எல் ஐ சி பாலிசி மீதான ஜிஎஸ்டி வரியை நீக்க வேண்டும் எல் ஐ சி பாலிசி கடன் மீதான வட்டியை குறைக்க வேண்டும் எல்ஐசி முகவர்களுக்கு குடும்ப ஓய்வூதியம் வழங்க வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளையும் முகவர்களின் நலன்காக்க பேசிய ஜி.கே.வாசனுக்கு நன்றி தெரிவித்தனர்.

தொடர்ந்து 20வது அமைப்பு தினத்தையொட்டி ஸ்ரீநகர் காலனியில் உள்ள எல்ஐசி அலுவலகம் முன்பு கிளை தலைவர் தமிழ்செல்வன் தலைமையில் கொடியேற்றி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.

இதில் முத்துகிருஷ்ணன் சாந்தகுமாரி மாநில குழு உறுப்பினர் குழந்தைவேல் முன்னாள் தலைவர்கள் கலியபெருமாள் செல்வமணி நிர்வாகிகள் உறுப்பினர்கள் முருகன் லட்சுமி மரியம் புஷ்பா புனிதா கலையரசி நரசிம்மன் சிவகுருநாதன் பார்த்திபன் சங்கர் மற்றும் லிகாய் முகவர்கள் நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு இனிப்புகளை வழங்கினார்கள்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here