திருவாரூர், மே. 01 –
திருவாரூர் நகரில் இன்று, ஆரூர் நாயுடு மஹாஜன சங்கம் சார்பில் யுகாதி பண்டிகை விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. (தெலுங்கு வருட பிறப்பு) மங்கள சந்திப்பு நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக தமிழக அரசின் முன்னாள் தலைமை செயலர் இராம மோகனராவ் ஐஏஎஸ் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
இந்த நிகழ்வில் மங்கல சந்திப்பாக திருமண பதிவு நடைபெற்றது. இவ்விழாவின் முன்பாக திருவிளக்கு ஏற்றி வைத்து சஷ்டியப்த பூர்த்தி, சதாபிஷேகம் தம்பதிகளை கவுரவிக்கப்பட்டனர்.
மேலும் இந்நிகழ்வில் கோலப் போட்டி, பாட்டுப் போட்டி, நடனப்போட்டி, இசை நாற்காலி போட்டி, மாறுவேடப் போட்டி, வினாடி வினா ஓவியப் போட்டி ஆகிய விளாயாட்டுப்போட்டிகள் நடத்தப்பட்டு அதில் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கி அவர்களை சிறப்பித்தார்கள். காலை 10 மணிக்கு துவங்கிய இந்நிகழ்வு மாலை 6 மணி வரை தொடர்ந்து நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.