ஆர்.கே.பேட், ஆக 3 –

இளைஞரை வழி மறித்து உருட்டுக் கட்டை மற்றும் தலைக்கவசத்தால் தாக்கிய 3 பேர் கொண்ட கும்பல் மீது வழக்கு பதிவு செய்து,  2 பேரை கைது செய்து ஜூடிசல் நீதிமன்றத்தில் ஒப்படைத்து ஆர்.கே.பேட் போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இது குறித்து அய்யன்னேரி கிராமம் பஜனை கோயில் தெருவில் வசிக்கும் முருகன் என்பவரின் மனைவி வயது 32 நித்தியா என்பவர் கொடுத்த புகார் மனுவின் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து இந்த நடவடிக்கையை மேற்கொண்டதாக போலீசார் வட்டத்தில் தெரிவிக்கப் படுகிறது.

அவர் கொடுத்தப் புகாரில் தனது மாமன் மகனான சிவா மற்றும் மோகன் இருவரும் கடந்த ஆக 1 ஆம் தேதி இரவு 7.30 மணியளவில் சோளிங்கரிலிருந்து அய்யனேரி பஞ்சகண்ணநாதப்புரம் குளக்கரை அருகில் வரும்போது, அதேப் பகுதியைச் சேர்ந்த முருகன் என்பவரின் மகன் வயது 25 இராமலிங்கம், ஏழுமலை என்பவரின் மகன் வயது 22 சூரியா, மணி என்பவரின் மகன் வயது 25 பாண்டியன் ஆகிய 3 பேர் கொண்ட கும்பல் சிவா மற்றும் ரமேஷ் என்பவர்களை வழிமறித்து அசிங்கமாக திட்டியும் உருட்டுக்கட்டை மற்றும் சூர்யா என்பவர் கையில் வைத்திருந்த தலைக்கவசத்தை பிடுங்கி இராமலிங்கம் சராமாரியாக சிவாவைத் தாக்கிவுள்ளார். அப்போது உடன் சென்ற மோகனையும் தாக்க முற்பட்ட போது அவ்வழியாக வாகனங்கள் வருவதைக் கண்ணு மூவரும் தப்பித்து ஒடி விட்டனர். இதுப்பற்றி மோகன் தனக்கு தகவல் கொடுத்த தாகவும் அப்புகாரில் நித்தியா தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து தானும் மோகனும் சிவாவை சோளிங்கர் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைப் பெற்ற பின் மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவ மனையில் உள் நோயாளியாக சேர்த்தப் பின் காவல் நிலையத்தில் இன்று அவர்கள் மூவர் மீதும் நடவடிக்கை எடுக்கப் புகார் அளித்துள்ளதாகப் புகார் மனுவில் இவ்வாறுத் தெரிவித்துள்ளார் . இது குறித்து போலீசார் அவர்கள் மூவர் மீதும் வழக்குப் பதிவுசெய்து மதள்கட்ட விசாரணையில் இவர்களுக்குள் முன் பகை இருந்த தாக தெரிந்துக் கொண்டனர். மேலும் தாக்கி காயப் படுத்தியதற்காக அவர்களில் முதல் குற்றவாளியான இராமலிங்கம், சூர்யா ஆகிய இருவரையும் கைது செய்து ஜூடிசியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினார் மூன்றாவது குற்றவாளியான பாண்டியன் தலைமறைவாக உள்ளார் என்று போலீசார் தரப்பில் கூறப்படுகிறது மேலும் தலைமறைவான பாண்டியனைத் தேடி வருவதாகவும் அவர்கள் கூறினர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here