சென்னை:

தமிழகத்தில் 39 பாராளுமன்ற தொகுதிகளுக்கும், புதுவை தொகுதிக்கும் ஏப்ரல் 18- ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அதே நாளில் தமிழகம், புதுவையில் 19 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடக்கிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 19-ம் தேதி தொடங்கி 26-ம் தேதி முடிந்தது.

வேட்பு மனுக்கள் பரிசீலனையில் மொத்தம் 932 மனுக்கள் ஏறுக்கொள்ளப்பட்டன. வேட்பு மனுக்களை திரும்பப் பெறுவதற்கு இன்று கடைசி நாளாகும்.

இதேபோல, தமிழகத்தில் உள்ள 18 சட்டமன்ற தொகுதிகளிலும் தாக்கல் செய்யப்பட்ட 518 மனுக்களில் 305 மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன. இதற்கிடையே, மாலை 3 மணிக்கு மேல் தேர்தல் சின்னங்கள் ஒதுக்கப்பட்டன.

இந்நிலையில், இறுதி வேட்பாளர் பட்டியல் இன்று மாலை வெளியானது. இதில் பாராளுமன்ற தேர்தலில் 845 பேர் போட்டியிடுகின்றனர்.

இதேபோல், தமிழகத்தில் காலியாக உள்ள 18 சட்டமன்ற தொகுதிகளில் 269 பேர் போட்டியிடுகின்றனர் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

பாராளுமன்ற தேர்தலை பொறுத்தவரையில் அதிகபட்சமாக கரூரில் 42 பேரும், தென்சென்னையில் 40 பேரும் போட்டியிடுகின்றனர். குறைந்தபட்சமாக நீலகிரி தொகுதியில் 10 பேரும் போட்டியிடுகின்றனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here