செங்கல்பட்டு, ஏப்.13-
செங்கல்பட்டு அடுத்த ரெட்டிப்பாளையம் பஞ்சாயத்தில் 10 நாட்களுக்கு மேல் குடிநீர் வராததால் ஏராளமான பொதுமக்கள் கொங்கனாஞ்சேரி – எழுச்சூர் சாலையில் காலி குடங்களுடன் அமர்ந்து குடிநீர் வழங்க வேண்டி சாலை மறியலில் ஈடுப்பட்டனர்.
இப்பிரச்சினைக் குறித்து பல முறை ஊராட்சி மன்ற தலைவரிடம் புகார் அளித்தும், அதற்கான பலன் கிட்டாதா நிலை உள்ளதாக அவ்வூர் மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
மேலும், பொறுப்பேற்று 7 மாதம் கடந்த நிலையில் பொதுமக்களுக்கான அடிப்படை தேவைகள் இதுநாள் வரை செய்யப்படவில்லை என்பது போன்ற குற்றச்சாட்டுகளையும் அவ்வூர் மக்கள் தெரிவிக்கின்றனர்.
கொரோனா வின் கோரதான்டவம் சற்று ஓய்ந்த நிலையில், அதிக அளவில் தினக்கூலிகள் வாழும் இந்த பஞ்சாயத்தில் மத்திய அரசு திட்டமான காந்தி ஊரக மேம்பாட்டு 100 நாள் பணிக்கும் திடீரென்று ஊராட்சி மன்ற தலைவர் வீட்டு வரியின் நிலுவை மற்றும் நடப்பு தொகையை பாக்கி இல்லாமல் கட்டினால் மட்டுமே தொடர்ந்து 100 நாள் பணி அட்டை புதுபிக்கப்படும் என உத்தரவு பிறப்பித்துள்ளதாக அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இப்பிரச்சிகனைகள் குறித்து உடனடியாக மாவட்ட ஆட்சியர் ஆ.ர.ராகுல்நாத் சம்பந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகத்தை ஆய்வு செய்து, இதுப் போன்ற கிராம மக்களின் வாழ்வாதாரப் பிரச்சினைகளை உருவாக்கும், ஊராட்சி மன்ற தலைவர் பதவியை ரத்து செய்து உத்தரவு பிறப்பிக்க வேண்டுமென அவ்வூர் பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.