தேனி கம்மவார் சங்க பாலிடெக்னிக் கல்லூரியில் மாணவர்கள் வரவேற்பு விழா நிகழ்ச்சி நடைப் பெற்றது .

தேனி : ஜூன், 26 –

தேனி அருகே உள்ள கம்மவார் சங்க பாலிடெக்னிக் கல்லூரியில் மாணவர்கள் வரவேற்பு நிகழ்ச்சி நடைப்பெற்றது . இவ்விழா கல்லூரியின் செயலாளர் சீனிவாசன் தலைமையிலும், பொருளாளர் தாமரைக்கண்ணன் முன்னிலையிலும் நடைபெற்றது.  இந்த விழாவில் கல்லூரியின் முதல்வர் முனைவர் தர்மலிங்கம் மாணவர்களின் வழிகாட்டுதல் மற்றும் முன்னேற்றம் குறித்தும், கல்லூரியின் செயல்பாடுகள் குறித்தும் உரையாற்றி வரவேற்புரை நிகழ்த்தினார். மேலும் இந்த விழாவில் கல்லூரி துணைச் செயலாளர் விஜயன் வரவேற்புரை நிகழ்த்தினார்.

முதலாம் ஆண்டு மாணவர்களை கல்லூரி அனைத்துத் துறை ஆசிரியர்கள், மற்றும் மூன்றாம் ஆண்டு மாணவர்கள் மூலம் பூங்கொத்து அளித்து வரவேற்றனர். இந்த முதலாம் ஆண்டு வரவேற்பு விழாவின் நிகழ்ச்சியின் முடிவில் நன்றியுரையை திட்ட அலுவலர் செல்வக்குமார் மற்றும் முதலாம் ஆண்டு அனைத்துத் துறை ஆசிரியர்கள் நிகழ்த்தினார்கள். மேலும் இந்த விழாவில் பாலி டெக்னிக் அனைத்துத் துறை ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் என பெரும்பாலோர் கலந்துக் கொண்டனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here