கும்பகோணம், ஜன. 25 –

தமிழகத்தில் தற்போது இந்தித் திணிப்பு போராட்டங்கள் பெரும் அளவில் நடைபெறுவது குறைந்துள்ளது. கடந்த 1965 காலக்கட்டத்தில் அதற்கான போராட்டம் வலுப்பெற்று இருந்தது . இந்தி மொழி திணிப்பை எதிர்த்தும் தாய்மொழி தமிழை தமிழகத்தில் வலுப்பெறும் நோக்கத்தில் போராடியவர்கள்  அப்போராட்டத்தில் தங்கள் இன்னுயிர் நீத்தவர்கள் தமிழகத்தில் ஏராளமானவர்கள் அவர்கள் அப்போது ஒருங்கிணைந்து போராடினார்கள்.

குறிப்பாக தாளமுத்து நடராசன், சின்னச்சாமி மற்றும் சாமிநாதன் உள்ளிட்ட பலரும் தமிழ்மொழி காத்த செம்மல்களாக காணப்படுகின்றனர். இந்த நிலையில் அத்தலைவர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் திமுக மாணவரணி சார்பில் திமுக மாவட்ட அலுவலகத்தில் மாணவர் அணி மாவட்ட அமைப்பாளர் செந்தில்குமார் தலைமையில் மொழிப்போர் தியாகிகளுக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் அரசு தலைமை கொறடா கோவி செழியன் மாவட்டச் செயலாளர் கல்யாணசுந்தரம் மயிலாடுதுறை பாராளுமன்ற உறுப்பினர் ராமலிங்கம் சட்டமன்ற உறுப்பினர் அன்பழகன் நகர செயலாளர் தமிழழகன் ஒன்றிய செயலாளர்கள் அசோக்குமார் கணேசன் மற்றும் நிர்வாகிகள் மாணவர் அணி பொறுப்பாளர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு மொழிப்போர் தியாகிகளுக்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்கள்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here