விழுப்புரத்தில் 4 பேர் கொண்ட காவலர்கள் குழு இன்று மதுவிலக்கு வேட்டையில் ஈடுப்பட்ட போது 500 லிட்டர் சாராயம் பிடிப்பட்டது. போலீசார் திடீர் நடவடிக்கையை அறிந்த குற்றவாளிகள் இருவர் தப்பி ஓடி தலை மறைவானர்கள், அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து அவர்களை பிடிக்க போலீசார் தீவிர தேடுதல் பணியில் ஈடுப்பட்டுள்ளனர்.

 

விழுப்புரம், செப். 1-

விழுப்புரம் மாவட்ட கண்காணிப்பாளர் ஸ்ரீநாதா ஐ.பி.எஸ் அவர்களின் கவனத்திற்கு கள்ளச் சாரயம் காச்சல் குறித்த தகவல் வந்ததையடுத்து ஆய்வாளர் திருப்பதி, உதவி ஆய்வாளர் புனிதவள்ளி, மற்றும் காவலர்கள் சரவணன், பிரபாகரன் ஆகியோர் அடங்கிய குழுவிற்கு அறிவுறுத்தியதின் பேரில் அவர்கள் அரகண்ட நல்லூர் காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட கிருஷ்ணா புரத்தில் மதுவிலக்கு வேட்டையில் ஈடுப்பட்டனர். அப்போது கோட்டமருதூரைச் சேர்ந்த எதிரிகள்: பாலாஜி த/பெ ஆறுமுகம் மற்றும் ஆறுமுகம் த/பெ முனுசாமி இவர்களுக்கு சொந்தமான சுமார் 500 லிட்டர் சாராய ஊறல் கண்டுபிடிக்கப்பட்டு சம்பவ இடத்திலேயே கொட்டி அழிக்கப்பட்டது. மேற் கண்ட இருவரும் போலீசாரின் திடீர் நடவடிக்கையை அறிந்து அங்கிருந்து தப்பி தலை மறைவானர்கள். பின்னர் அவர்கள் இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து அவர்களைப் பிடிக்க தீவிர தேடுதல் பணியில் போலீசார் ஈடுப்பட்டு வருகின்றனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here