திருவள்ளூர், ஏப். 03 –

தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன்…

திருவள்ளூர் அருகே குடிதண்ணீர் வழங்காத பஞ்சாயத்து நிர்வாகத்தை கண்டித்து காலி குடங்களுடன் பொதுமக்கள் அரசு பேருந்தை சிறைபிடித்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.

திருவள்ளூர் மாவட்டம் பூண்டி அடுத்த நம்பாக்கம் கிராமத்தில் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் மேல்நிலை தொட்டி மூலம் கிராம பஞ்சாயத்து நிர்வாகம் சார்பில் கிராம மக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில் கடந்த ஒரு மாதகாலமாக கிராம மக்களுக்கு சரிவர குடிநீர் வழங்கவில்லை என கூறப்படுகிறது. இது சம்பந்தமாக கிராம மக்கள் ஊராட்சி மன்ற தலைவர் முனிவேல் என்பவரிடம் பலமுறை தெரிவித்தும் பஞ்சாயத்து நிர்வாகம் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்காததால் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகள் மற்றும் அன்றாட பணிக்கு செல்லும் பொதுமக்கள் குளிப்பதற்கும் குடிப்பதற்கும் தண்ணீரின்றி அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.

இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் திருவள்ளூரில்  இருந்து பிளேஸ்பாளையம் வரை செல்லும் அரசு பேருந்தை சிறைப்பிடித்து காலி குடங்களுடன் சாலை மறியலில்  ஈடுபட்டனர். இதனை அடுத்து தகவல் அறிந்த பென்னாலூர்பேட்டை  காவல் துறையினர் விரைந்து வந்து சாலை மறியலில் ஈடுபட்ட கிராம மக்களிடம் சமாதான பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். ஆனாலும் பூண்டி வட்டார வளர்ச்சி அலுவலர் நேரில் வந்து பேச்சுவார்த்தை நடத்தினால் மட்டுமே மறியலை கைவிடுவோம் என கிராம பொதுமக்கள் திட்டவட்டமாக தெரிவித்து சாலைமறியலில் ஈடுபட்டனர்.

இதனை அடுத்து ஊராட்சி மன்ற தலைவர் முனிவேல் வந்து கிராம மக்களிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டார். அப்போது ஊராட்சி மன்ற தலைவருக்கும் கிராம மக்களுக்கும் வாக்கு வாதம் ஏற்பட்டதால் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

‌அதனை அடுத்து காவல் துறையினர் கிராம மக்களை சமாதானம் செய்து முறையான குடிநீர் வழங்க ஏற்பாடு செய்வதாக உறுதியளித்ததை தொடர்ந்து கிராம மக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here