காஞ்சிபுரம், மார்ச். 19 –

தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ்

காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூர் தாலுக்கா, செரப்பனஞ்சேரி ஊராட்சிக்கு உட்பட்ட ஆரம்பாக்கம் கிராமத்தில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு அரசு மதுபான கடை திறந்து வைக்கப்பட்டுள்ளது.

அரசு மதுபான கடை திறந்ததின் காரணமாக மது அருந்தும் குடிமகன்களால் கிராமப் பெண்களுக்கும் பள்ளி செல்லும் குழந்தைகளுக்கும் பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டு வருவதால் உடனடியாக அரசு மதுபானக் கடையை  அகற்றிட வேண்டும் என வலியுறுத்தி நூற்றுக்கும் மேற்பட்ட கிராமப் பெண்கள் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு நேரில் வந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.

மேலும் அரசு மதுபான கடையை உடனடியாக அகற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தி ஒற்றுமைப் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் அரசு மதுபான கடையை அகற்றாவிட்டால் எதிர் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் வாக்களிக்காமல் புறக்கணிக்கப்பு செய்விம் என அரசுக்கு அழுத்த திருத்தமாக அம்மக்கள் தெரிவித்துள்ளனர்.

கிராம மக்களின் போராட்டத்தினை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காஞ்சிபுரம் தாலுக்கா போலீசார் மற்றும் அரசியல் அதிகாரிகள் கிராம மக்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி அரசு மதுபான கடையை அகற்ற நடவடிக்கை மேற்கொள்வதாக உறுதியளித்ததின் பேரில் ஆரம்பாக்கம் கிராமப் பெண்மணிகள் கலைந்து சென்றனர். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திடீரென கிராம மக்களின் முற்றுகைப் போராட்டம் நடைபெற்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here