ராமநாதபுரம், ஜூலை 12-
முதுகுளத்தூர் அய்யனார் கோயிலில் உள்ள வளாகத்தில் வருகிற ஜூலை 15ல் (திங்கள்கிழமை) அன்று கிராமக்கோயில்கள் பூசாரிகளின்6வது மாவட்ட மாநாடு நடக்க உள்ளது. என கிராம கோயில் பூஜாரிகள் மாநிலத்தலைவர் வாசு பங்கேற்கிறார் என சங்கத்தின் மண்டலத்தலைவர் சண்முகசுந்தரம் கூறினார்.
அவர் மேலும் கூறியதாவது:
தமிழகததில் கிராம கோயில் பசாரிகள் தன்னலமற்று கோயில்களில் சிறப்பு பணி செய்து வருகின்றனர். அவர்கள் நலன் காக்க சில கோரிக்கைகளை வைத்துள்ளோம். அதில் கிராமக்கோயில்களில் 1 கால பூஜை திட்டத்தை விரிவுபடுத்த வேண்டும்.தற்போது மாதம் ரூ.ஆயிரம் வழங்கப்படும் ஒய்வூதியத்தைகூடுதலாக உயர்த்தி தரவேண்டும். ஓய்வூதியம் விண்ணப்பிக்கும் அனைத்து பூசாரிகளுக்கும் வழங்கவேண்டும். நல வாரிய உறுப்பினர்களுக்கான அட்டையை வழங்கிட வேண்டும்உள்ளிட்ட முக்கிய கோரிக்கைகளை அரசுக்கு தீர்மானமாகநிறைவேற்றி வழங்கிட உள்ளோம், இக்கோரிக்கைகளை வலியுறுத்தியும் மக்கள் சுபிட்சமாக இருப்பதற்காகவும் முதுகுளத்துார் அய்யனார் கோயிலில் சிறப்பு பூஜைகள் நடத்தி மாவட்டத்தின் கிராம கோயில் பூசாரிகளின் 6ம் மாவட்ட மாநாடு நடத்த திட்டமிட்டுள்ளோம். இந்த மாநாட்டில் கிராம பூசாரிகள் நல வாரிய உறுப்பினர்கள், ஓய்வூதியம் பெறும் உறுப்பினர்கள், ஒரு கால திட்டத்தில் பயன்பெறும் பூசாரிகள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும்,
இவ்வாறு அவர் கூறினார்.