திருவாரூர், ஜன. 18 –

திருவாரூர் நகரத்தில் ஆரூரான் விளையாட்டுக் கழகம் சார்பில் நேற்று சிறியவர் பெரியவர்கள் என அனைவருக்குமான கோலப்போட்டி, நீச்சல் போட்டி, தடகள போட்டி, சைக்கிள் போட்டி, ரேக்ளா ரேஸ்  என பல விதமானப் போட்டிகள் நடைபெற்றது.

ஆரூரான் விளையாட்டுக் கழகத்தின் சார்பில் இப்போட்டி 38 வது ஆண்டாக நடத்தப்பட்டு வருகிறது.

இப்போட்டியினைக் காண இப்பகுதியைச் சேர்ந்த சுமார் 5000 க்கும் மேற்பட்டோர் குழுமி இருந்தார்கள்.

ஒவ்வொரு போட்டியின் பொழுதும் வெற்றி பெற்றவர்கள் மற்றும் போட்டியில் பங்கெடுத்தவர்களை ஆரவாரமாக அவர்கள் உற்சாகப்படுத்தி கொண்டேயிருந்தனர்.

மேலும், திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த பல விளையாட்டு வீரர்களான சிறார்கள், சிறுமியர்கள் மற்றும் பெரியவர்கள் என பல்வேறுத் தரப்பனர்கள் இந்த விளையாட்டு போட்டியில் கலந்து கொண்டனர்.

திருவாரூர் தேர் திருவிழாவிற்கு பிறகு மக்கள் அதிகம் கூடும் ஒரு நிகழ்ச்சியாக இந்நிகழ்ச்சி அமைந்திருந்தது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here