திருவாரூர், டிச. 02 –

தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியின் 46வது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு திருவாரூர் மாவட்ட உதயநிதி ஸ்டாலின் ரசிகர் நற்பணி மன்றம் சார்பில் பள்ளி குழந்தைகளுக்கு நோட்டு, புத்தகம், ஸ்கேல், ரப்பர் உள்ளிட்ட கல்வி உபகரணப் பொருட்களை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

திருவாரூர் வடக்கு கொத்ததெரு பகுதியில் உள்ள பி.எம்.அரசு உதவிபெறும் தொடக்கப்பள்ளியில் படிக்கும் 100க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் மத்தியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சரின் பிறந்தநாளை முன்னிட்டு பள்ளி குழந்தைகள் கேக் வெட்டி கொண்டாடினர்.

தொடர்ந்து பள்ளி மாணவ மாணவிகளுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன. மேலும் நோட்டு, புத்தகம், ஸ்கேல், ரப்பர் உள்ளிட்ட  நலத்திட்ட உதவிகளை பெற்றுக்கொண்ட பள்ளி குழந்தைகள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு உரத்த குரலில் முழக்கமிட்டு பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான உதயநிதி ஸ்டாலின் ரசிகர்கள் கலந்து கொண்டனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here