கும்பகோணம், நவ. 13 –
சாதிக்கும், மதத்திற்கும் அப்பாற்பட்டவர்கள் மாமன்னன் இராஜ இராஜ சோழனும், திருவள்ளுவரும், தெற்காசியா முழுவதற்கும் சிறந்த மக்களாட்சி தந்த மாமன்னன், அவர் மக்கள் நிலத்தை பறித்தார் என்பது வரலாற்றை திரித்து கூறுவதை ஏற்க இயலாது, இது தமிழக மக்களுக்கு தலை குனிவை ஏற்படுத்தியுள்ளது, இதனை போக்க, தமிழக முதல்வர் இந்த வழக்கை மேல்முறையீடு செய்ய வேண்டும் என்றும், அதுபோலவே, திருவள்ளுவரை கிருஸ்துவத்திற்கும் மதம் மாறி விட்டார் என்பது போல பாதிரியார் தெய்வநாயகம் கூறுவதும், அதற்கு திருமாவளவனும் இது ஆய்விற்கு உட்படுத்த வேண்டியது என கூறியிருப்பது கண்டிக்கதக்கது, இது தொடர்ந்தால், இந்து மக்கள் கட்சி இதற்காக மிகப்பெரிய போராட்டத்தை முன்னெடுக்கும் என கும்பகோணம் அருகே உடையாளுரில் இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன்சம்பத் பேட்டி அளித்தார்.
ஆண்டு தோறும் மாமன்னன் ராஜராஜசோழனின் பிறந்தநாள் விழா ஐப்பசி திங்கள் சதய நட்சத்திரத்தன்று சதய விழாவாக கொண்டாடப்படுகிறது இவ்வாண்டும் 1036வது சதயவிழா வழக்கம் போல் அரசு சார்பில் தஞ்சை மாவட்டத்திற்கு உள்ளுர் விடுமுறை விடப்பட்டு தஞ்சையில் சிறப்பாக இன்று நடைபெற்று வருகிறது, அதே வேளையில் அவரது சமாதி அமைந்துள்ள கும்பகோணம் அருகேயுள்ள உடையாளுரில் மாமன்னன் தொடக்க காலத்தில்; அரண்மனையோடும், சொந்த பந்தங்களோடும், படை பரிவாரங்களுடன் வாழ்ந்து உலக நாடுகள் பலவற்றை கடல் கடந்து சென்று வெற்றி கொண்டதாகவும், தெற்காசியாவையே கட்டியாண்டதாக வரலாறு கி பி 1014ம் ஆண்டு இராஜராஜன் இறந்த பின்னர் பழையாறை அரண்மனைக்கு அருகேயுள்ள ஓடத்தோப்பில் சமாதி அமைக்கப்பட்டதாகவும் அவர் சிவதீட்சை பெற்றவர் என்பதால் அவரது சமாதி அமைந்த இடத்தில் அவரது மகன் இராஜேந்திர சோழனால் மிகப்பெரிய சிவலிங்கம் பிரதிஷ்டை செய்து நினைவுக்கோயில் அமைக்கப்பட்டது. இது குறித்த கல்வெட்டுகள் அங்குள்ள பால்குளத்தி அம்மன் கோயில் மற்றும் கைலாசநாதர் கோயில்களில் இருப்பதாக வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
இந்நிலையில், மாமன்னனின் 1036வது சதய விழாவினை முன்னிட்டு, இன்று, கும்பகோணம் அருகேயுள்ள உடையாளுரில் உள்ள அவரது சமாதியாக கூறப்படும் இடத்தில் அமைந்துள்ள சிவலிங்கத்தை இன்று இந்து மக்கள் கட்சி தமிழக தலைவர் அர்ஜூன் சம்பத் வழிபட்டார், பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர்,
சாதிக்கும், மதத்திற்கும் அப்பாற்பட்டவர்கள் மாமன்னன் இராஜ இராஜ சோழனும், திருவள்ளுவரும், தெற்காசியா முழுவதற்கும் சிறந்த மக்களாட்சி தந்த மாமன்னன், அவர் மக்கள் நிலத்தை பறித்தார் என்பது வரலாற்றை திரித்து கூறுவதை ஏற்க இயலாது, இது தமிழக மக்களுக்கு தலை குனிவை ஏற்படுத்தியுள்ளது, இதனை போக்க, தமிழக முதல்வர் இந்த வழக்கை மேல்முறையீடு செய்ய வேண்டும் என்றும், அதுபோலவே, திருவள்ளுவரை கிருஸ்துவத்திற்கும் மதம் மாறி விட்டார் என்பது போல பாதிரியார் தெய்வநாயகம் கூறுவதும், அதற்கு திருமாவளவனும் இது ஆய்விற்கு உட்படுத்த வேண்டியது என கூறியிருப்பது கண்டிக்கதக்கது, இதனை யாரும் கண்டுகொள்ளாததும், வியப்பாகவுள்ளது, இது தொடர்ந்தால், இந்து மக்கள் கட்சி இதற்காக மிகப்பெரிய போராட்டத்தை முன்னெடுக்கும் என்றும், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை தமிழக முதல்வர்; நேரில் சந்தித்து வருகிறார், பாதிக்கப்பட்டோருக்கு உரிய நிவாரணத்தை உடனடியாக தமிழக அரசு வழங்கிட வேண்டும், சென்னையில் பாதிக்கப்பட்டோருக்கு குடும்பஅட்டைதார்களுக்கு ரூபாய் 3 ஆயிரம் வழங்கிட வேண்டும், உயிரிழந்தோருக்கு தலா ரூபாய் 10 லட்சம் வழங்கிட வேண்டும் என்றும், ஜெய்பீம் படத்தில், உண்மை சம்பவம் என்ற பெயரில், கதாபாத்திரங்களில் உண்மை பெயர்களை ஒரு சில கதாபாத்திரங்களுக்கு மட்டும் வைத்து விட்டு, சில கதாபாத்திரங்களை வேண்டும் என்றே மாற்றி அமைத்து இருப்பது கண்டனத்திற்குரியது குறிப்பாக, சந்துரு மற்றும் பெருமாள்சாமி பெயர் இடம் பெற்றது போலவே, அந்தோணிசாமி பெயரை மட்டும் குருவாக மாற்றி சித்தரித்து இருப்பது, சாதிய வன்மத்தோடு எடுக்கப்பட்டதையே காட்டுகிறது, சாதிய மோதலை உண்டாக்கவே இப்படி எடுக்கப்பட்டுள்ளது இது கண்டிக்கதக்கது இக்காட்சிகள் மாற்றி அமைக்கப்பட வேண்டும் என்றும் அர்ஜூன் சம்பத் வலியுறுத்தினார்.