அம்பத்தூர், ஜன. 18 –
கொரட்டூர் ரயில் நிலையம் அருகே உள்ள ஆட்டோ ஸ்டாண்டில் விற்பனைக்காக 12 கிலோ கஞ்சாவை கடத்தி வந்து வைத்திருந்த இரண்டு வெளி மாநிலப் பெண்களை கைது செய்து சிறையில் அடைத்த அம்பத்தூர் மதுவிலக்கு பிரிவு காவல் ஆய்வாளர் தனம்மாள்.
சென்னை புறநகர் பகுதியான ஆவடி அடுத்துள்ள கொரட்டூர் ரயில் நிலையம் அருகே வெளி மாநிலத்தைச் சேர்ந்த இரண்டு பெண்கள் கஞ்சா வைத்திருப்பதாக அம்பத்தூர் மதுவிலக்கு ஆய்வாளர் தனம்மாளுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் கொரட்டூர் ரயில் நிலையம் பேருந்து நிலையம் அருகே ரகசிய கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர் மதுவிலக்கு காவலர்கள்.
அப்போது சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் கொரட்டூர் இரயில்வே அருகைவுள்ள ஆட்டோ ஸ்டாண்டு அருகே மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த அணிம தாஸ் 46 மற்றும் சந்தியா தாஸ் 34 என்ற இரண்டு பெண்மனிகள் விற்பனைக்காக 12 கிலோ கஞ்சாவை கடத்தி வந்து வைத்துக் இருப்பதைக் கண்ட காவலர்கள் அவர்களை மடக்கி பிடித்து அம்பத்தூர் மதுவிலக்கு காவல் நிலையத்திற்கு அழைத்துச் வந்து அவர்களிடம் தொடர் விசாரணை மேற்கொண்டு அவர்களிடம் இருந்து 12 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து அவர்கள் இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.