பொன்னேரி, மார்ச். 15 – 

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் உள்ள உழவர் உற்பத்தியாளர் நிறுவன அலுவலகத்தில் வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை விவசாயிகள் பயிற்சி முகம் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் பொன்னேரி உழவர் உற்பத்தி நிறுவன தலைவர் விஜயகுமார் அனைவரையும் வரவேற்று வரவேற்புரை நிகழ்த்தினார். தொடர்ந்து தமிழ்நாடு மாநில வேளாண்மை விற்பனை வாரியம் பயிற்சி மையம் வேளாண்மை உதவி இயக்குனர் வேல்முருகன் திட்ட விளக்க உரை நிகழ்த்தினார்.

மேலும், வேளாண்மை துணை இயக்குனர் ராஜேஸ்வரி தலைமை தாங்கி பயிற்சியை தொடங்கி வைத்தார். பின்னர் உழவர் சந்தை குளிர்பதன கிடங்கு தமிழ்நாடு சிறு விவசாயிகள் வேளாண் வணிக நட்பு அமைப்பு உழவர் உற்பத்தியாளர் அமைப்புக்கான மத்திய மாநில அரசின் ஆதரவு திட்டங்கள் உணவு பூங்கா தமிழ்நாடு உணவு பதப்படுத்துதல் கொள்கை விநியோக தொடர்பான வேளாண்மை மற்றும் வேளாண்மை ஏற்றுமதி ஆகியவை குறித்து எடுத்துரைத்தார்.

அதனைத் தொடர்ந்து .APEDA நிறுவனத்தை சேர்ந்த ரகு துணை இயக்குனர் மாவட்ட தொழில் மையம் விஜயராணி, தமிழ்நாடு ஊரக புத்தாக்க திட்டம் ஊரக வளர்ச்சி, ஊராட்சித் துறை வட்டார தலைவர் கணபதி  .ஆகியோர் வேளாண் வணிகம் திட்டம் குறித்து சிறப்புரை ஆற்றினார்கள்.

இந்நிகழ்ச்சியின் நிறைவாக இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவருக்கும் நன்றி தெரிவித்து, மீஞ்சூர் உதவி வேளாண்மை அலுவலர் சுஜிதா மேரி நன்றியுரையாற்றினார்..

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here