திருவள்ளூர் , மே. 28 –
கடந்த 31 ஜன – 2011 ஆம் தேதியன்று சென்னை மாவட்டம் ஜே.ஜே.நகர் மத்திய பிரிவு செயல்பாடு மற்றும் பராமரிப்பு தமிழ்நாடு மின்வாரிய இளநிலை பொறியாளர் மணி என்பவர் மீது ஊழல் தடுப்பு மற்றும் காண்காணிப்புத்துறை சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசாரால் புகார்தார ரிடம் இருந்து புதிய வீட்டு மனைக்கு மும்முனை மின் இணைப்பு வழங்க ரூ.1000 த்தை லஞ்சமாக கேட்டு வாங்கியவர் மீது தொடரப்பட்ட வழக்கு திருவள்ளூர் முதன்மை குற்றவியல் நீதிமன்றத்தில் நடைப்பெற்று வந்தது.
அவ்வழக்கின் தீர்ப்பு கடந்த மே 24 – 2022 அன்று திருவள்ளூர் முதன்மை குற்றவியல் நீதியரசரால் தீர்ப்பு வழங்கப்பட்டது. அத்தீர்ப்பில் புகார்தார ரிடம் இருந்து ரூ. 1000 த்தை கேட்டு பெற்ற குற்றவாளி மணி க்கு லஞ்சம் கேட்டதற்காக 4 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும் தண்டத்தொகை ரூ.20 ஆயிரமும் அதைப்போல் லஞ்சம் பெற்றதற்காக 4 ஆண்டுகள் கடங்காவல் தண்டனையும் ரூ.20 ஆயிரம் தண்டத்தொகையையும் விதித்து இத்தண்டனைகளை ஏக காலத்தில் குற்றவாளி மணி அனுபவிக்க வேண்டும் என அத்தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டள்ளது.