தமிழகம் முழுவதும் கடந்த மார்ச் 14 முதல் 29 வரை நடைப் பெற்ற பத்தாம் வகுப்பில் கல்வி பயிலும் மாணாக்கர் களுக்கான அரசு பொதுத் தேர்வு நடைப் பெற்றது. அதில் மேனிலை பள்ளிகள் 7,286 உயர் நிலைப் பள்ளிகள் 5,262 என மொத்தம் 12,548 பள்ளிகளில் கல்வி பயிலும் மாணாக்கர்கள். இப் பொதுத் தேர்வில் கலந்துக் கொண்டு தேர்வு எழுதினார்கள். அதில் 6,100 பள்ளிகள் 100 % தேர்ச்சியை அதாவது கிட்டத்தட்ட பாதிக்கு பாதி என்ற இலக்கை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத் தக்கதாகும்.
பத்தாம் வகுப்பு தேர்வில் தேர்ச்சிப் பெற்ற சார்பு பள்ளிகளின் தேர்ச்சி சதவீதம்
அரசுப் பள்ளி 92.48% அரசு உதவிப்பெறும் பள்ளிகள் 94.53%
மெட்ரிக் 99.05%
இருபாலர் 95.42%
பெண்கள் பள்ளி 96.89%
ஆண்கள் பள்ளி 88.94%
பாட வகையான தேர்ச்சி
மொழிப்பாடம் 96.12%
ஆங்கிலம் 97.35%
கணிதம் 96.46%
அறிவியல் 98.56%
சமூக அறிவியல் 97.07%
தமிழக பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் மாநில அளவில் அதிகமாக தேர்ச்சி பெற்று முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாவட்டங்கள்
திருப்பூர் 98.53%
இராமநாதபுரம் 98.48%
நாமக்கல் 98.45%