குன்றத்தூர், ஏப். 13 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் டார்ஜன் ..
ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற தொகுதியில் பாஜக தலைமையிலான தேசிய முற்போக்கு கூட்டணியின் தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் சைக்கிள் சின்னத்தில் போட்டியிடும் வி.என்.வேணுகோபாலை ஆதரித்து, காஞ்சிபுரம் மாவட்ட தமாக மகளிரணித் தலைவி குன்றத்தூர் ஜெ.வசந்தா குன்றத்தூர் நகராட்சி பகுதிக்குட்பட்ட அனைத்து வார்டுகளுக்கும் நடைப்பயணமாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுப்பட்டார்.
அப்போது அவர் பிரதமர் மோடியின் பத்தாண்டு காலத்தில் செய்த பல்வேறு நலத்திட்டங்கள் குறித்த துண்டு பிரசுரங்களை பொதுமக்களிட்ம் வழங்கி வி.என் வேணுகோபாலுக்கு சைக்கிள் சின்னத்தில் வாக்களித்து அவரை பெரும்வாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றிப் பெற செய்ய வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.