திருவாரூர், ஜன. 14 –

தம்பட்டம் செய்திகளுக்காக திருவாரூர் மாவட்டச் செய்தியாளர் கே.நாகராஜன் …

உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டு வரும் ராமர் கோயிலின் கும்பாபிஷேகம் எதிர் வரும் ஜனவரி 22-ம் தேதி வெகு விமரிசையாக நடைபெற உள்ளது.

அவ்விழாவினை முன்னிட்டு, திருவாரூர் மாவட்டம், திருவாரூர் அடுத்துள்ள தண்டலை மற்றும் விளமல் பகுதியில் சுமார் 500க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு ஹனுமான், சிவன் மற்றும் பார்வதி வேடமிட்டவர்களை, திருவாரூர் மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட தலைவர் பாஸ்கர் மற்றும் மாவட்ட பொதுச் செயலாளர் செந்தில் அரசன் ஆகியோர் தலைமையிலான பாஜகவினர் வீடு வீடாக நேரில் அழைத்துச் சென்று அயோத்தியில் நடைபெறும் இராமர் கோவில் கும்பாபிஷேக பத்திரிக்கை மற்றும் அட்சதை வீட்டு வாசலில் ஏற்றும் அகல் விளக்குடன் வெற்றிலை பாக்கு புஷ்பங்கள் வைத்து அனைவரையும் அன்று மதியம் கும்பாபிஷேகத்தை நேரடி ஒளிபரப்பில் பார்க்குமாறு அழைப்பு விடுத்தனர்.

மேலும் அயோத்தியில் நடைப்பெறும் கும்பாபிஷேகத்திற்கு முதல் நாளே அவரவர் பகுதியின் அருகே உள்ள கோவில்களில் அர்ச்சனை செய்தும் கும்பாபிஷேகத்தன்று மாலை 6 மணிக்கு அனைத்து வீட்டின் வாசல்களிலும் ஐந்து அகல் விளக்குகள் மற்றும் திருவிளக்கு ஏற்றி வைத்து வழிபடுமாறு செய்யுமாறு அப்போது அவர்கள் கேட்டுக் கொண்டனர்.

இந்நிகழ்வின் போது,  மாவட்டச் செயலாளர் ரவி, எட்டியலூர்.சிவா, ஓபிசி அணி மாவட்ட செயலாளர் வினோத்குமார், ஜெகதீசன் முரளி, விவேகானந்தன், கழுகுசங்கர், மற்றும் பொறுப்பாளர்கள் மற்றும் திரளான அக்கட்சியின் தொண்டர்கள் கலந்து கொண்டு ஜெய் ஸ்ரீ/ராம் முழக்கமிட்டபடி கும்பாபிஷேக பத்திரிக்கையினை அப்பகுதி மக்களிடம் வழங்கினார்கள்..

பேட்டி ; செந்திலரசன், திருவாரூர் மாவட்ட பாஜக செயலாளர்

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here