குடவாசல், ஜூலை. 21 –

மனிதனுக்கும் மற்ற உயிரினங்களுக்கும் சுகாதாரக் கேடு ஏற்படாமல் இருக்க இயற்கை உரங்களை பயன்படுத்த வேண்டும் என மத்திய அரசின் சார்பில் விவசாயிகளுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகே கடகம்பாடி பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் மத்திய ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு மையம் சார்பில் விவசாயிகளுக்கான ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு பற்றிய இரண்டு நாள் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைப்பெற்றது. இந்நிகழ்ச்சியில் குடவாசல் வட்டாரத்தைச் சுற்றியுள்ள 60 க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.

மேலும், பயிர்களின் பாதுகாப்பிற்கென பயன்படுத்தப்படும் பூச்சி மருந்தினால் மனிதர்களுக்கும் மற்ற உயிரினங்களுக்கும்  பல்வேறு பிரச்சனைகள் ஏற்படுகிறது. பயிரில் உள்ள பூச்சிகள் களைகளில் ஏற்பட்டுள்ள எதிர்ப்புத்திறன் இதன் காரணமாக ஒவ்வொரு முறையும் அதிக திறன் மற்றும் அதிக அளவில் இவற்றை உபயோகிக்க வேண்டிய கட்டாயமாக்கப்படுகிறது.

தெளிக்கப்படும்  இரசாயனங்களால் கால்நடை  பிற உயிரினங்கள் மற்றும் மனிதர்கள் உண்ணும் உணவுப் பொருட்களில் எஞ்சிய நஞ்சு உணவு சங்கிலியில் ஊடுருவி இயற்கையின் தங்கி தேங்கி விடுகிறது. காற்று நீர் மண் என இயற்கை ஆதாரங்கள் மாசடைவதால் மனிதனுக்கு மற்ற உயிரினங்களுக்கும் சுகாதாரக் கேடு ஏற்படுகிறது. எனவும் இதனை தவிர்க்க வேண்டி இரசாயனமின்றி இயற்கையாக உரம் தயாரித்து  அதனை விவசாயிகள் பயன்படுத்த வேண்டும் என இந்நிகழ்ச்சியில் கூறினர்.

பேட்டி: குணசீலன், விவசாயி சரபோஜிராஜபுரம்

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here