திருவள்ளூர், மார்ச். 14 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன்
திருவள்ளூர் மாவட்டம், மகளிர் உரிமை திட்டம் குறித்து இழிவாக பேசிய குஷ்புவை கண்டித்து அவரது உருவப் படத்தை எரித்து திருவள்ளூர் மேற்கு மாவட்ட மகளிர் மற்றும் தொண்டர் அணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தமிழ்நாடு முதல்வரின் சீரிய திட்டமான மகளிர் உரிமை திட்டத்தின் கீழ் ஆயிரம் ரூபாய் வழங்குவது குறித்து இழிவாக பேசிய தேசிய மகளிர் ஆணைய குழு உறுப்பினரும் நடிகையுமான குஷ்புவை கண்டித்தும் அவரது உருவ படத்தை எரித்தும் திமுக மகளிர் தொண்டர் அணியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அண்மையில் செய்தியாளர்கள் சந்திப்பில் தேசிய மகளிர் குழு ஆணைய உறுப்பினரும் பாஜக பிரமுகருமான நடிகை குஷ்பு மகளிர் உரிமைத்தொகை ஆயிரம் ரூபாய் வழங்குவது குறித்து இழிவாக பேசியதை கண்டித்து திருவள்ளூர் அடுத்த ஆயில் மில் பகுதியில் திருவள்ளூர் மேற்கு மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் சரஸ்வதி சந்திரசேகர், மாவட்ட மகளிர் தொண்டரணி அமைப்பாளர் ஜி.கோவிந்தம்மாள் ஆகியோர்கள் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மேலும் அதில் மாவட்ட மகளிர் தொண்டர் அணி தலைவர் காந்திமதி, துணை அமைப்பாளர்கள் வேளாங்கண்ணி, தமிழ்மொழி, பூங்கோதை, லட்சுமி உள்பட50 க்கும் மேற்பட்ட மகளிர் அணி, தொண்டர் அணியினர் கலந்து கொண்டு குஷ்புவை கண்டித்து கண்டன கோஷம் எழுப்பி அவரது உருவப்படத்தை தீயிட்டு கொளுத்தியும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.