பழவேற்காடு, டிச. 19 –

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி வட்டம், பழவேற்காடு மீனவர் குப்பம் பகுதிகளான அரங்கம்குப்பம், வைரவன்குப்பம், கோரை குப்பம், கருங்காலி, பள்ளப்பாடு ஆகிய பகுதிகளில் உள்ள கடலோரப் பகுதியில் எண்ணெய் கழிவு தென்படுவதாக மீனவர் பிரதிநிதிகள் அளித்த மனுவின் பேரில் திருவள்ளூர் மாவட்ட ஆட்சி தலைவர் டாக்டர் த.பிரபு சங்கர், மற்றும் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய பொறியாளர்கள், வருவாய்த்துறை, மீன்வளத்துறை அலுவலர்களுடன் நேரடியாக சென்று கள ஆய்வு மேற்கொண்டார்.

மீனவர்கள் புகார் தெரிவித்த கடற்பகுதி மற்றும் பக்கிங்காம் கால்வாய் பகுதியில் ஆய்வு செய்த பின் செய்தியாளர்களிடம் பேசியபோது கடற்பகுதியில் ஒதுங்கிய எண்ணெய் கழிவுகள் சேகரிக்கப்பட்டு தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதனைத்தொடர்ந்து, அப்பகுதிகளில் இருக்கும் மீன்கள் ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது.எனவும், அதன்பின் மீன் பிடிப்பது குறித்து அறிக்கை வெளியிடப்படும் என மாவட்ட ஆட்சியார் தெரிவித்தார்.

இந்த ஆய்வின் போது மாவட்ட ஆட்சியருடன் பொன்னேரி சாராட்சியர் வாகே சங்கெத் பல்வந்த், வட்டாட்சியர் மதிவாணன் மீன்வளத்துறை உதவி இயக்குனர் கங்காதரன், மீஞ்சூர் வட்டார வளர்ச்சி அலுவலர் நடராஜ், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ருத்ரமூர்த்தி, ஊராட்சி மன்ற தலைவர்கள் ஞானவேல், கஜேந்திரன், ஒன்றிய கவுன்சிலர் செல்வழகி எர்ணாவூரான், எம்.கே.தமின்சா மற்றும் மீனவ கிராம பிரதிநிதிகள் உடனிருந்தனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here