திருவள்ளூர், ஏப். 23 –

தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன்…

திருவள்ளூரில் அமைந்துள்ள ஸ்ரீ வைத்திய வீரராகவ பெருமாள் கோவிலில் சித்திரை மாத பிரம்மோற்சவ விழாவின் 9 ஆம் நாளான இன்று திருக்குளத்தில் தீர்த்தவாரி நிகழ்ச்சி வெகு விமர்சையாக நடைபெற்றது அதில் பங்கேற்ற திரளான பக்தர்கள் திருக்குளத்தில் நீராடி சாமி தரிசனம் செய்தனர்.

108 திவ்ய தேசங்களில் வைணவத் தளமாக விளங்கும் திருவள்ளூரில் அமைந்துள்ள ஸ்ரீ வைத்திய வீரராகவப் பெருமாள் கோயிலில் சித்திரை மாத பிரமோற்சவ விழாவை முன்னிட்டு 9-ம் நாளான இன்று தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்றது.

திருவள்ளூர் ஸ்ரீ வீரராகவ பெருமாள் கோவிலில் சித்திரை மாத பிரமோற்சவ விழா கடந்த 15-ம் தேதி  கொடியேற்றத்துடன் தொடங்கியது. 17-ம் தேதி கருட சேவையும், 21-ம் தேதி தேரோட்டமும் நடைபெற்றது.தினமும் காலை மற்றும் மாலையில் உற்சவர் வீரராகவ பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.9-ம் நாளான இன்று கோயில் ‘ஹ்ருத்தாப நாசினி குளத்தில் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்றது.

அதில், உற்சவர் வீரராகவர், சக்கரத்தாழ்வார் 3 முறை குளத்தில் மூழ்கி, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அவ்விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்துக் கொண்டு உற்சவர் வீரராகவர் மற்றும் சக்கரத்தாழ்வார் குளத்தில் மூன்று முறை மூழ்கிய  பின் பக்தர்கள் திருக்குளத்தில் நீராடி சுவாமியை வழிபட்டனர்.

கோயில் குளம் ஆழமாக உள்ளதால், அசம்பாவித சம்பவங்கள் ஏற்படாமல் தடுக்க போலீசார் மற்றும் தீயணைப்பு மீட்பு குழுவினர் குளத்தை சுற்றிலும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here