வில்லிவாக்கம், ஜன. 12 –
திருவள்ளூர் மாவட்டம் வில்லிவாக்கம் ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆவடி அடுத்த ஆலத்தூர் கிராம ஊராட்சியில் உள்ள விவசாய நிலத்தில் இன்று பழுதடைந்த உயரழுத்த மின்சாரம் செல்லும் மின்கம்பிகளை தாங்கி நின்றிருந்த மின்கம்பம் திடீரென சரிந்து விழுந்தது.
இவ்விபத்து நடந்த போது அப்பகுதியில் யாரும் இல்லாததால் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை, மேலும், தற்போது அடுத்த விளைச்சலுக்கான விவசாயப் பணிகள் அப்பகுதியில் அங்காங்கே நடந்து வரும் நிலையில், மின்கம்பம் திடீரென சரிந்து விழுந்த சம்பவம். அப்பகுதி விவசாயிகளிடையே ஒருவித அச்சத்தை ஏற்படுத்திவுள்ளது. மேலும் இந்த விபத்தினால் அக்கம்பம் தாங்கிருந்த உயரழுத்த மின் கம்பி அறுந்து அந்நிலத்தில் உள்ள நீரில் மின்சாரம் பாய்ந்து வந்த நிலையில், அவ்வூர் மக்கள் மின்வாரிய அலுவலத்திற்கு தகவல் தரப்பட்டதை தொடர்ந்து மின்சாரத்தை மின் வாரிய ஊழியர்கள் துண்டித்தனர்.
திடீரென மின் கம்பம் சாய்ந்ததற்கு அக்கம்பம் பழுதுப்பட்டு போனதே காரணமாக இருக்கலாம் என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். மின்வாரிய உயர் அலுவலர்கள் உடனடியாக இவ்விபத்துக் குறித்து நேரடி ஆய்வு நடத்தி புதிய மின் கம்பத்தை அமைத்து தரும்படியும், அவ்வூர் பகுதிகளுக்கு மின் விநியோகம் செய்யும் மின் கடத்திகளை சரிசெய்து துண்டிக்கப்பட்ட மின் விநியோகத்திற்கான பணியை விரைவுப்படுத்தி கால தாமதமின்றி மின்சாரம் வழங்கிடவும் வலியுறுத்துகிறார்கள்.