கும்பகோணம், ஜூன். 18 –

கும்பகோணம் அருகே உள்ள தாராசுரத்தில் இன்று மாலை இடியுடன் கூடிய மழை பெய்து வந்தது. அப்போது அங்கு சில பேர் மழையின் காரணமாக அங்கிருந்த புளியமரத்தின் கீழ் நின்றனர். அப்போது பலத்த சத்ததுடன், 3 பேர் நின்றிருந்த மரத்தின் மீது இடி  விழுந்தது. இதில் படுகாயம் அடைந்த 3 பேர்களை அக்கம் பக்கம் இருந்தவர்கள் மீட்டு அரசு மருத்துமனையில் சேர்த்தனர்.

தாராசுரத்தில் மிகவும் பழமையான ஐராவதீஸ்வரர் கோயில் உள்ளது. இக்கோயிலை சுற்றிலும் 50 ஆண்டுகளுக்கு மேல் பழமையான புளியமரங்கள் உள்ளது. இந்நிலையில் இன்று மாலை, கும்பகோணம் சென்னை பிரதான புறவழிச்சாலையிலுள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் பொறியியல் படிக்கும், திருவாரூர் மாவட்டம், குடவாசல், அகர ஒகையை  சேர்ந்த தர்மலிங்கம் மகன் கிஷோர் (23), திருபுவனத்தை சேர்ந்த ரவி மகள் புவனேஸ்வரி (21), அதே பகுதியை சேர்ந்த கிருஷ்ணகுமார் மகள் அபினேஷ் (21) ஆகிய 3 பேரும் கோயிலின் வடக்கு புறத்தில் பேசிக்கொண்டிருந்த போது, திடிரென இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது.

இதனையறிந்த 3 பேரும், மழைக்கு பயந்து, புளியமரத்தின் கீழ் நின்றனர். அப்போது பலத்த சத்ததுடன், 3 பேர் நின்றிருந்த மரத்தின் மீது இடி விழுந்தது.  இதில் 3 பேர், படுகாயம் அடைந்தனர். அருகிலுள்ளவர்கள் 108 ஆம்புலனசுக்கு தகவல அளித்ததின் தகவல்பேரில், 3 பேரையும்  அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இது குறித்து தாலுக்கா காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here