திருவள்ளூர், செப். 14 –

திருவள்ளூர் மாவட்டம், பஞ்செட்டி பகுதியில் அமைந்துள்ளது வேலம்மாள் தனியார் பள்ளி. அதன் வளாகத்தினுள் மெட்ரிக்குலேசன் பள்ளியும். வேலம்மாள் இன்டர்நேஷனல், போதி  பள்ளிகள் என்று மூன்று பள்ளிகள் அமைந்துள்ளது. இந்நிலையில் நேற்று காலையில் பள்ளியினுள் வெடிகுண்டு வைத்துள்ளதாக குறுஞ்செய்தி மூலம் மிரட்டல் வந்ததாக கூறப்படுகிறது.

அதனை  தொடர்ந்து 3 பள்ளிக்கும் விடுமுறை அளித்தனர் .மேலும் பெற்றோர்கள் மூலம் மாணவர்களை வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். தகவல் அறிந்து வந்த பொன்னேரி வட்டாட்சியர் செல்வகுமார் மற்றும் கவரப்பேட்டைகாவல் துறையினர் தொடர்ந்து பள்ளி வளாகத்தில் டிஎஸ்பி கிரியாசக்தி .காவல் ஆய்வாளர் பாலசுப்ரமணியன் ஆகியோர் தலைமையிலான போலீசார் வெடிகுண்டு கண்டுபிடிக்கும் கருவி மற்றும் மோப்பநாய் உதவியுடன் ஒவ்வொரு கட்டிடத்தின் அறைகளிலும்  தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

மேலும் சென்னையில் இருந்து  மருதம் சிறப்பு வெடிகுண்டு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு  சீசர் எனும் மோப்ப நாய் உள்ளிட்ட இரண்டு மோப்ப நாய்கள் மூலம் தீவிர சோதனை மேற்கொண்டனர்.

மேலும் இப்பள்ளியில் படித்து வரும் சுமார் 5ஆயிரத்திற்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்களை பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டு தொடர்ந்து சோதனை மேற்கொண்டனர். இதனை தொடர்ந்து பள்ளிக்கு மூன்று நாட்கள் விடுமுறையும் நிர்வாகத்தின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் தொடர் சோதனையில் எவ்வித வெடிகுண்டுகளும் இல்லை என்பதும், இது வீண் வதந்தி என்பதும் போலீசார் மேற்கொண்ட சோதனையில் தெரிய வந்துள்ளது. மேலும் இப்பள்ளிக்கு வெடிக்குண்டு மிரட்டல் விடுத்த நபர் குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் அப்பகுதியில் நேற்று பரபரப்பு நிலவியது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here