தேனி மாவட்டம் ஆண்டிபட்டி வட்டாரத்தில் உள்ள கடமலை மயிலை ஒன்றியத்தில் விவசாயிகளின் நீண்ட கோரிக்கையாக உழவர் சந்தை அமைக்க வேண்டும் என்ற நிலை இருந்து வந்துள்ளது. இந்நிலையில் தற்போது கடமலை மயிலை ஒன்றியத்தில் கடமலைக் குண்டு பஸ் நிலையத்திலிருந்து தேனி செல்லும் சாலையில் புதிய உழவர் காய்கறிசந்தை துவக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தேனி மாவட்ட இயற்கை வேளாண்மை உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் செந்தில் குமார் கூறியதாவது, இந்த உழவர் சந்தையில் நூற்றுக்கும் மேற்பட்ட கடைகள் தற்பொழுது செயல்படுகிறது இந்த உழவர் சந்தையில் விவசாயிகள் தன்னுடைய தோட்டத்தில் விளையும் பொருட்களை நேரடியாக வந்து விவசாய காய்கறி சந்தையில் விற்பனை செய்வதால் விவசாயிகளுக்கு நல்ல லாபமும் பொதுமக்களுக்கு குறைவான விலையில் பசுமையான காய்கறிகள் கிடைக்கின்றன.
இந்த காய்கறிசந்தை திறப்பதற்கு முன்னாள் தேனி ஆண்டிபட்டி மற்றும் சின்னமனூர் ஆகிய பகுதிகளுக்கு சென்று பொதுமக்கள் வாங்கி வந்து சிரம்பஃபட்டனர் தற்போது நிலைமை மாறி தங்கள் கிராமத்தில் சந்தை திறந்து உள்ளதால் பொதுமக்கள் வெவ்வேறு பகுதியிலிருந்தும், தினமும் கடமலை மயிலை ஒன்றியத்திலுள்ள நூற்றுக்கும் மேற்பட்ட கிராம மக்கள் இந்த சந்தையில் வந்து குறைந்த விலையில் பசுமையான இயற்கை காய்கறிகள் வாங்கி பயனடைந்து அகம் மகிழ்ந்து செல்கின்றனர் என்று கூறினார்.
செய்திகள் தேனி மாவட்டச் செய்தியாளர் செ.பரமசிவம்