கும்பகோணம், பிப். 03 –

தைப்பூச திருவிழாவை முன்னிட்டு, கும்பகோணம் வட்டாரத்தில் பிரசித்தி பெற்ற திருவிடைமருதூர் அருள்மிகு மகாலிங்க சுவாமி திருக்கோயில் பஞ்சரத (5தேர்கள்) திருத்தேரோட்ட பெருவிழா வெகு விமர்சையாக இன்று தொடங்கியது.

இத்திரோட்டம் திருவாவடுதுறை ஆதீனம் 24 வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவான தேசிக பரமாச்சாரியார் சுவாமிகள் முன்னிலையிலும் இதில் பங்கேற்ற ஆயிரக்கணக்கான பக்தர்கள் இடை மருதா மகாலிங்கா என முழக்கமிட்டு தேரினை வடம் பிடித்து இழுக்க இத்திருத் தேரோட்ட மெருவிழா இனிதாக தொடங்கியது.

மேலும் இத்திருத்தலம் பிரம்மஹத்தி தோஷம் நீக்கும் சிறப்பு ஸ்தலமாகவும் திருக்கயிலாய பரம்பரை திருவாவடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமான அருள்மிகு மகாலிங்க சுவாமி திருக்கோயில் தைப்பூச பெருவிழா கடந்த 26 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி தினந்தோறும் சுவாமி அம்பாள் சிறப்பு ஊர்வலங்களும் நடந்து வருகிறது

மேலும் ஆண்டுதோறும், பத்து நாட்கள் நடைப்பெறும் இவ்விழாவில், உற்சவத்தின் பிரதான நிகழ்வான பஞ்சரத திருத் தேரோட்ட பெருவிழா வெகு விமர்சையாக தொடங்கியது.

மேலும், சுமார் 500 டன் எடையுள்ள பிரம்மாண்ட தேரில் சிறப்பு மலர் அலங்காரத்தில் அருள்மிகு மகாலிங்க சுவாமி எழுந்தருள, விநாயகர் தேர், முருகன் தேர், பிரகத் சுந்தர குஜாம்பிகை தேர், சண்டிகேஸ்வரர் தேர் என ஐந்து தேர்கள் பிரம்மாண்டமாய் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு பூஜைகளுடன் திருவாவடுதுறை ஆதீனம் 24 வது குரு மகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவான தேசிக பரமாச்சாரியார் சுவாமிகள் முன்னிலையில், தொடங்கியது.

அந்நிகழ்வின் போது, சிவாச்சாரியார்களின் வேத மந்திரங்கள் விளங்கிட ஓதுவா மூர்த்திகள் தேவார திருவாசக பதிகங்களுடன் சிவ வாத்தியங்கள் இசைத்திட இடை மருதா… மகாலிங்கா… என பக்தர்களின் வின் முட்டும் குரலோசையுடன் பஞ்சரதத் திருத்தேரோட்ட பெருவிழா இனிதே தொடங்கியது.

இந்நிகழ்ச்சியில் பங்கேற்க தமிழகத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தேரினை வடம் பிடித்து இழுத்து வழிபாடு செய்து வருகின்றனர். மேலும், இத் திருத்தேரோட்ட பெருவிழாவை முன்னிட்டு திருவிடைமருதூர் காவல்துறை கண்காணிப்பாளர் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்

மேலும் வருவாய்த்துறை திருவிடைமருதூர் பேரூராட்சி சுகாதாரத்துறை மின்சார துறை உள்ளிட்ட ஏராளமான துறை சார்ந்த அலுவலர் மற்றும் பணியாளர்கள் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here