திருவாரூர், மே. 28 –
திருவாரூரில் மத்திய பல்கலைக்கழகத்தில் இன்றும் நாளையும் நடைபெறும் தேசிய கல்வி கொள்கை கருத்தரங்கை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று துவக்கி வைத்தார்.
இந்நிகழ்வில் மத்திய பல்கலைக்கழக துணைவேந்தர் கிருஷ்ணன் உள்ளிட்ட துணைவேந்தர்கள், கல்வியாளர்கள் கலந்து கொண்டனர்.மேலும் இக்கருத்தரங்கை துவக்கி வைத்து உரையாற்றிய தமிழக ஆளுநர் ஆர் என் ரவி பேசியதாவது:
ஒரு காலத்தில் நாம் வேற்றுமையில் ஒற்றுமையாக இருந்தோம். தற்போதைய காலகட்டத்தில் வேற்றுமைகள் வேற்றுமையாக பார்க்கும் போக்கு அதிகமாக உள்ளது. எனவும் அதனால் தான் நாட்டின் வளர்ச்சி தடைபடுவதாகவும் குறிப்பிட்டார்.
அரசு மக்களுக்கு நன்மை பயக்கும் பல கொள்கை திட்டங்களை வகுக்கின்றன. அதனை செயல்படுத்தும் ஆட்சியர்கள் மற்றும் அதிகாரிகள் அதனைச் சரியாக புரிந்து கொண்டு செயல்படுத்தினால் நல்ல பலனைத் தரும்.
எனவே அதிகாரிகளும் ஆட்சியர்களும் புதிய கல்விக் கொள்கையை முழுமையாக படித்து அதன் சாரத்தையும் உணர்ந்து அதை சிறப்பாக செயல்படுத்தினால் நாடு வளர்ச்சி பாதையில் செல்லும் என்றார்.
செப்புமொழி பதினெட்டுடையாள் சிந்தனை ஒன்றுடையாள் என்று பாரதி கூறியது போல தேசம் முழுவதும் பல்வேறு மொழிகள் பேசப்பட்டாலும் ஒரே நாட்டிற்குள் நாம் வசிக்கிறோம் என்பதை உணர்ந்து பெருமை கொண்டு அனைவரும் செயல்படுவோம். என்றாவறு தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி பேசினார்.