திருவாரூர், ஜூலை. 27 –
தமிழகம் முழுவதும் தற்பொழுது தமிழக அரசு உயர்த்தியுள்ள மின் கட்டணத்தை பல்வேறு எதிர் கட்சிகள் கண்டன ஆர்ப்பாட்டாம் நடத்தி வரும் நிலையில், தமிழ்மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் இன்று திருவாரூரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது. அது குறித்து அக்கட்சியினர் தெரிவிக்கையில், தமிழக அரசு தற்போது உயர்த்தியுள்ள மின் கட்டணம் என்பது, மிகவும் கண்டிக்கதக்கதாகும். மேலும் கடந்த மூன்று வருடமாக கொரோனா எனும் கொடும் தொற்றால் சிறு குறு தொழில் நசிந்து, ஏழை, எளிய நடுத்தர மக்களின் வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தமிழக அரசு கடந்த ஆறு மாதத்திற்கு முன்புதான் வீட்டுவரி, சொத்துவரியை உயர்த்தியது. தொடர்ந்து தற்போது, ஏழை, எளிய மக்களை பாதிக்கும் மின்சாரக் கட்டண உயர்வு என்ற தமிழக அரசின் அறிவிப்பு வெந்த புண்ணில் வேலை பாய்ச்சுவதாக உள்ளது.
மேலும் ஏழை, எளிய, நடுத்தர மக்களின் தலையில் பேரிடியாக விழுந்துள்ளது. ஆட்சி பொறுப்பு ஏற்று ஒரு ஆண்டு நிறைவு செய்த விடியா திமுக அரசு ஏழை, எளிய மக்களை பாதிக்கின்ற அறிவிப்பினை உடனடியாக திரும்ப பெற வேண்டும் எனவும், மின் கட்டண உயர்வு குறித்து அறிவித்த மின்துறை அமைச்சர் சம்மந்தமே இல்லாமல் மத்திய அரசின் அழுத்தத்தின் காரணமாக மின் கட்டணத்தை உயர்த்தி உள்ளதாகவும், தமிழ்நாடு மின்சார வாரிய ஒழுங்கு முறை ஆணையமே மின் உயர்வுக்கு காரணம் என்றும், ஒரு சொல்லி மின்சார கட்டணத்தை உயர்த்தி ஏழை, எளிய, நடுத்தர மக்களை இந்த அரசு வாட்டி வதைக்கிறது. என முழக்கங்கள் எழுப்பி தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு வழங்கினார்கள்.
இந்நிகழ்வில் தமிழ் மாநகர காங்கிரஸ் மாவட்ட தலைவர் தினகரன் தலைமையில் மணக்கால் ராமகிருஷ்ணன், வட்டார தலைவர் குருமூர்த்தி, பொருளாளர் முரளிதரன், செல்லதுரை, கரிகாலன், சங்கர், பாஸ்கர், லட்சுமணன், சந்திரசேகரன், நகர செயலாளர் கார்த்தி, டி. எம். சி. தியாகராஜன், ராஜகோபால், அண்டாம் பாளையம் சேகர், இளங்கோவன் ஆகியோர் கலந்து கொண்டு மனு அளித்தனர்.
பேட்டி: கரிகாலன் (மாநில கொள்கை பரப்புச் செயலாளர் தமிழ் மாநில காங்கிரஸ்)