PIC FILE COPY

திருவண்ணாமலை. ஜூலை.23- 

திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அடுத்த எலத்தூர் மோட்டூர் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ சிவசுப்பிரமணிய சுவாமியை தரிசனம் செய்வதற்கு ஆடிக் கிருத்திகை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் காவடி எடுத்துக்கொண்டு வருவார்கள். அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் அனைத்தும் சரியான முறையில் இருக்கிறதா? என்பது குறித்து பெ.சு.தி.சரவணன் எம்எல்ஏ நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது  அவர் பேசுகையில்
ஆடி கிருத்திகை பண்டிகைக்கு காவடி எடுத்துக்கொண்டு ஏராளமான பக்தர்கள் வருவது வழக்கமாக நடைபெற்று வருகிறது. அதில் சென்ற 2 ஆண்டு காலமாக கொரோனா தாக்கத்தால் பக்தர்களுக்கு தடைப்பட்டிருந்தது இப்பொழுது கொரோனா தாக்கம் குறைந்துள்ளது அதனால் கோவில்கள் அனைத்தும் திறக்கப்பட்டு சாமி தரிசனம் செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இருப்பினும் பக்தர்கள் பாதுகாப்பாக வந்து சாமி தரிசனம் செய்வதற்கு போதுமான அடிப்படை வசதி மருத்துவ வசதிகள் குடிநீர் வசதிகள் சாலை வசதிகள் போன்ற அடிப்படை வசதிகள் அனைத்தும் சரியான முறையில் உள்ளதா என்பதை ஆய்வு மேற்கொண்டார்.

அப்பொழுது கொரோனா தோற்று பாதுகாப்பிற்காக மக்கள் தடுப்பூசி போட்டுக் கொள்வதற்கும் முக கவசம் அணிவதற்கும் சமூக இடைவெளி கடைப்பிடிப்பதற்கும் மருத்துவ முகாம் தயாராக உள்ளதா ஆய்வு மேற்கொண்டு அப்போது கொரோனா தோற்று குறைந்த அளவில் கூட மக்களுக்கு வரக்கூடாது என்பதற்காக விழிப்புணர்வு ஊட்டும் வகையில் ஆய்வு மேற்கொண்டார்.

அதனைத் தொடர்ந்து   அதே இடத்தில் பெ.சு.தி.சரவணன் எம்எல்ஏ, கொரோனா தடுப்பூசியை செலுத்திக் கொண்டார்.
அதன் பிறகு பக்தர்கள் கிரிவலம் செல்லும் பாதையில் மழை பெய்ததால் சாலைகளில் தண்ணீர் தேங்கி கொண்டு இருந்ததை கண்டு உடனடியாக மழைநீரை அப்புறப்படுத்த வேண்டும் என்பதற்காக சம்பந்தப்பட்ட இடத்தில் உடனடியாக தண்ணீர் செல்வதற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளும் அமைத்துக் கொடுத்து தண்ணீரை அப்புறப்படுத்தினார்.

மேலும், மக்களுக்கு குடிநீர் வசதிகள் சரியான முறையில் வழங்கப்படுகிறதா என்பதை ஆய்வு செய்து கிணற்றிலிருந்து தண்ணீர் சுத்தமாக வருகிறதா என்பதையும் பார்வையிட்ட அவர் அனைத்து அடிப்படை வசதிகளையும் உடனடியாக செய்துதர சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்திய அவர் பின்னர் ஸ்ரீ சிவசுப்பிரமணிய சுவாமியை தரிசனம் செய்தார்.

இவ்வாய்வின் போது கலசபாக்கம் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் அன்பரசி ராஜசேகரன், ஒன்றிய செயலாளர்கள் அ.சிவக்குமார், க.சுப்பிரமணியம், கோவில் நிர்வாக செயல் அலுவலர் ஹரிஹரன், தாசில்தார் தட்சிணாமூர்த்தி, ஊராட்சி மன்ற தலைவர் முருகன், கோயில் உபயதாரர்கள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் திமுக நிர்வாகிகள் உடனிருந்தனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here