திருவண்ணாமலை நகரம், காட்டாம்பூண்டி மருத்துவ வட்டாரத்தில்
அனைத்து கடைகளும் மாலை 5 மணிக்குள் மூட வேண்டும்
மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

செய்தி சேகரிப்பு இராமமூர்த்தி

திருவண்ணாமலை, ஆக.16-

கொரோனா தொற்று பரவல் மீண்டும் அதிகரித்துள்ளதால் திருவண்ணாமலை மற்றும் காட்டாம்பூண்டி பகுதிகளில் அனைத்து கடைகளும் 10 நாட்களுக்கு மாலை 5 மணிக்குள் மூட வேண்டுமென மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ் உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது திருவண்ணாமலை நகரம் மற்றும் காட்டாம்பூண்டி மருத்துவ வட்டாரத்தில் கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருவது கவலையளிப்பதாக உள்ளது. இது தொடர்பாக வணிகர்களுடன் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டு கருத்து கேட்கப்பட்டது.

இதையடுத்து திருவண்ணாமலை நகரம் மற்றும் காட்டாம்பூண்டி மருத்துவ வட்டாரத்தில் மட்டும் வருகிற 25ந் தேதி வரை 10 நாட்களுக்கு அனைத்து கடைகளும் காலை 6 மணிமுதல் மாலை 5 மணிவரை மட்டும் செயல்பட அனுமதிக்கப்படும்.

உணவகங்கள் மற்றும் தேனீர் கடைகளில் மாலை 5 மணிவரை 50 சதவித வாடிக்கையாளர்களுடன் சமூக இடைவெளி மற்றும் வழிகாட்டி நெறிகளை பின்பற்றி செயல்படலாம் மாலை 5 மணிக்கு பிறகு பார்சல் சேவைக்கு மட்டுமே அனுமதிக்கப்படும். கடை மற்றும் உணவக உரிமையாளர்கள், ஊழியர்கள் ஆகியோர் கட்டாயம் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும்.

கடைகளை ஆய்வு செய்யும் போது முகக்கவசம் அணியாமல் இருப்பது மற்றும் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாமல் இருப்பது கண்டறியப்பட்டால் அபராதம் விதிக்கப்படும்.

கடைகள் உணவகங்கள் மற்றும் தேநீர் கடைகளுக்கு வரும் வாடிக்கையாளர்களை முகக்கவசம் அணிய உரிமையாளர்கள் அறிவுறுத்த வேண்டும். மாவட்ட நிர்வாகத்தின் முயற்சிக்கு அனைத்து தரப்பினரும் முழு ஒத்துழைப்பு அளித்து திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனா தொற்றை மற்றிலும் அகற்றிட உதவிட வேண்டும். இவ்வாறு அவர் அந்த அறிவிப்பில் தெரிவித்துள்ளார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here