திருவண்ணாமலை, மார்ச். 16 –
தமிழ்நாடு முதலமைச்சர் ஆணைக்கிணங்க, பொது பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு அறிவுறுத்தலின் படி திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு வட்டம், ஆவணியாபுரம் ஊராட்சியில் தாய், தந்யையை இழந்த குழந்தைகளுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் பா. முருகேஷ், நேரில் சென்று குழந்தைகளுக்கு உதவிகளை வழங்கினார்.
திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு வட்டம் ஆவணியாபுரம் கிராமத்தில் தாய் தந்தை இழந்த குழந்தைகளுக்கு அளிக்கப்பட்ட உதவிகள் விவரம்
குழந்தைகளின் பெயர்கள் :
- செல்வி.கார்த்திகா (வயது.15) -10 ஆம் வகுப்பு செல்வன்.சிரஞ்சீவி (வயது.14) – 9 ஆம் வகுப்பு 3. செல்வி.நிறைமதி (வயது. 11) 6 ஆம் வகுப்பு
தற்போது, ஆவணியாபுரம் அரசு உயர்நிலை பள்ளியில் படிக்கின்றனர்.
பெற்றோர் விவரம் :1.திரு.லோகநாதன், 05.02.2017 தேதி அன்று இறப்பு
2. திருமதி.வேண்டா 04.01.2022 தேதி அன்று இறப்பு
தற்போது, இவர்களின் அத்தை முத்தாள் என்பவரின் பராமரிப்பில் வசித்து வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவரால் நேற்று முன்தினம் (14.03.2022) அளிக்கப்பட்ட உதவிகள் விவரம் :
குழந்தைகள் பாதுகாப்பு அலகிலிருந்து பராமரிப்பு நிதியாக ஒவ்வொரு குழந்தைக்கும் ரூ.2,000ஃ- வீதம் மூன்று குழந்தைகளுக்கு பிரதிமாதம் ரூ.6,000ஃ- அனுமதிக்கப்பட்டுள்ளது. முதல் மாதத்திற்கான தொகை நேற்று முன்தினம் (14.03.2022) காசோலையாக அளிக்கப்பட்டது. அடுத்த மாதங்களில் இருந்து அவர்களின் வங்கி கணக்கிற்கு தொகை ஈடு செய்யப்படும். தற்சமயம் பழைய ஷீட் வீட்டில் வசித்து வருகின்றனர். இக்குழந்தைகளுக்கு ஊரக வளர்ச்சி துறை மூலமாக இலவச வீட்டிற்கான அனுமதி ணை இன்று (14.03.2022) அளிக்கப்ப்டது. இந்த வீடு ஊரக வளர்ச்சி துறை மூலமாக ஏநனெழச ஏற்பாடு செய்து கட்டித்தரப்படும்.
உழவர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ். இக்குழந்தைகளின் திருமதி.வேண்டா என்பவர் இறந்ததற்கு நிவாரணத் தொகை ரூ.22,500 நேற்று முன்தினம் (14.03.2022) அனுமதிக்கப்பட்டது. இத்தொகை மூத்த மகள் செல்வி. கார்த்திகா என்பவரின் வங்கி கணக்கில் ஈடு செய்யப்படும்.
இவர்கள் தற்போது வசித்து வரும் வீடு தாத்தா திரு.(லேட்) மாணிக்கம் பிள்ளை என்பவரின் பெயரில் பட்டவாக (மொத்தம் 2 1. 2 சென்ட்) இருந்தததை இரண்டில் ஒரு பங்கு (1 1 4 சென்ட்) இடம் இக்குழந்தைகளின் பெயரில் பட்டா மாற்றம் செய்து அத்தை திருமதி.முத்தாள் என்பவரை பாதுகாவலராக வைக்கப்பட்டது. இவர்களின் தாத்தா திரு.(லேட்) மாணிக்கம் பிள்ளை என்பவரின் பெயரில் இருந்த நிலத்தின் (மொத்தம் 69 ஏர்ஸ்) மூன்றில் ஒரு பங்கு (60 சென்ட்) இடம் இக்குழந்தைகளின் பெயரில் பட்டா மாற்றம் செய்து அத்தை திருமதி.முத்தாள் என்பவரை பாதுகாவலராக வைக்கப்பட்டது.
இக்குழந்தைகளின் அத்தை திருமதி.முத்தாள் என்பவரின் பாதுகாப்பில் இந்த கல்வியாண்டு (வரும் ஏப்ரல் 2022 மாதம் வரை) முடியும் வரை படிக்க வைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இக்குழந்தைகள் விருப்பம் தெரிவித்தன் பேரில் இந்த கல்வியாண்டு முடிந்தவுடன் மாவட்ட சமூக நலத் துறை கட்டுப்பாட்டில் உள்ள அரசு காப்பகத்தில் சேர்க்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இக்குழந்தைகளுக்கு 3 மாதங்களுக்கு தேவையான அரிசி மற்றும் இதர மளிகை பொருட்கள் மாவட்ட நிர்வாகத்தால் தனியார் தொண்டு நிறுவனங்கள் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டு இன்று அளிக்கப்பட்டது.
இக்குழந்தைகளுக்கு தேவையான புதிய ஆடைகள், பள்ளி நோட் புக் மற்றும் காலணிகள் ஆகியனவும் அளிக்கப்பட்டது. மாவட்ட நிர்வாகத்தால் தனியார் தொண்டு மூலம் ஏற்பாடு செய்யப்பட்டு அளிக்கப்பட்டது. இக்குழந்தைகளுக்கு சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்யக் கோரி சென்னை சமூக பாதுகாப்பு துறை ஆணையர் அவர்களுக்கு கருத்துரு அனுப்பப்பட்டுள்ளது.
இந்நிகழ்ச்சியில் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) மு. பிரதாப், செய்யார் வருவாய் கோட்டாட்சியர் விஜயராஜ் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.