திருவள்ளூர் மக்களவை தொகுதியின் வாக்காளர் எண்ணிக்கை மற்றும் தேர்தல் பணி குறித்த நடவடிக்கை களையும் மாவட்ட ஆட்சியரும், தேர்தல் அலுவலரு மான மகேஷ்வரி இரவி குமார் அறிவித்தார்.

 

 

 

திருவள்ளூர்:ஏப்,17-

 

திருவள்ளுர் மாவட்டத்தில் 31.01.2019 அன்று வெளியிடப் பட்ட வாக்காளர் பட்டியலில் படி ஆண் வாக்காளர்கள் 16,05,908, பெண் வாக்காளர்கள் 16,28,089 மற்றும் மூன்றாம் பாலினத்தவர் 709 என மொத்தம் 32,34,706 வாக்காளர்களும்,  பின்னர் 26.03.2019 வரை வாக்காளர் பட்டியலில் 16,29,966 ஆண் வாக்காளர்களும், 16,54,630 பெண் வாக்காளர்களும் மற்றும் மூன்றாம் பாலினத்தவர் 714 என மொத்தம் 32,85,310 வாக்களர்கள் ஆவார்கள். இரண்டாவது பட்டியல் படி விடுபட்ட மற்றும் பல்வேறு காரணங்களின் அடிப்படையில் 50,604 வாக்களர்கள் இணைக்கப் பட்டுள்ளனர்.

 

திருவள்ளூர் மாவட்ட சட்ட சபை தொகுதிகள் :

இம் மாவட்டத்தில் 10 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன . அதன் குட்பட்ட பகுதிகளில் மொத்தம் 3603 வாக்குச் சாவடி நிலையங்கள் உள்ளது. இவற்றில் 166 மிதமான பதற்றம் ஏற்படும் வாக்குச் சாவடி நிலையங்களும், பதற்றம் ஏற்படக் கூடிய பகுதிகள் என 9 வாக்குச் சாவடி நிலையங்கள் என கண்டறியப் பட்டுள்ளது.

 

தேர்தல் பணி குழுக்கள் :

இத்தேர்தலில் செலவின கண்காணிப்பு குழுக்களில் 90 பறக்கும் கண்காணிப்பு குழுக்களும், 30 நிலையான கண்காணிப்பு குழுக்களும், 11 ஒளிப் பதிவுகளை பார்க்கும் குழுக்களும், 11 ஒளிப்பதிவு கண் காணிப்பு குழுக்களும், 11 கணக்கீட்டு குழுக்களும், 11 உதவி செலவின பார்வையாளர்கள் அடங்கிய குழுக்கள் என அமைக்கப் பட்டுள்ளது.

 

சோதனைச் சாவடிகள் :

இம்மாவட்ட நாடாளுமன்ற தொகுதியில் 27 சோதனைச் சாவடி மையங்களில் 11 மாநிலங்களுக் குட்பட்ட சோதனைச் சாவடிகளும், 14 மாவட்டங்களுக் குட்பட்ட சோதனைச் சாவடிகளும், 2 சுங்கச் சாவடிகளும், உள்ளன.

பறக்கும் படையினாரால் தேர்தல் விதி மீறல் படி பிடிப்பட்ட மதிப்பு தொகை :

மாவட்டத்தில் இதுவரை பறக்கும் கண்காணிப்பு குழுக்கள் மற்றும் நிலையான கண்காணிப்பு குழுக்கள் மூலம் சோதனையிடப் பட்டு ரூ,2,32,61,240 மதிப்பில் பணமும், ரூ. 10,00,000 மதிப்பிலான 23 குட்கா பண்டல்களும் மற்றும் 73 மதுபான பாட்டில்கள் என ஆக மொத்தம் ரூ. 2,42,64,140 மதிப்பிலான பொருட்கள் பறிமுதல் செய்யப் பட்டுள்ளது.

தேர்தல் நடத்தை விதிமீறல் நடவடிக்கை :

தேர்தல் நடத்தை விதிமீறல்கள் தொடர்பாக பல்வேறு கட்சிகளின் மீது இதுவரை மொத்தம் 59 வழக்குகள் பதிவு செய்யப் பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு பொது மக்களிடமிருந்து தேர்தல் சம்பந்தப்பட்ட 671 புகார்கள் பெறப்பட்டு, அதில் 595 புகார்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.

 

தேர்தல் வாக்காளர் விழிப்புணர்வு நடவடிக்கை :

மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் 100 சதவிகிதம் வாக்குப்பதிவு அடைய வலியுறுத்தி பொதுமக்களிடையே நடத்தப்பட்டுள்ளது.  இவ்வாறு மாவட்ட ஆட்சித் தலைவர் / தேர்தல் அலுவலர்  கூறினார்.

கொடி அணி வகுப்பு :

இதனைத் தொடர்ந்து, மாவட்ட காவல் கண் காணிப்பாளர் பொன்னி கும்மிடிப் பூண்டி, திருத்தணி ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக் குட்பட்ட 9 வாக்குச் சாவடி மையங்கள் பதற்றமானவை என கண்டறியப் பட்டும், 166 மிதமான பதற்றம் ஏற்படும் வாக்குச்சாவடி மையங்கள் கண்டறியப் பட்டு, ஒவ்வொரு தொகுதிகளிலும், காவல் துறையின் கொடி அணிவகுப்பு நடத்தப் பட்டுள்ளது.

பாதுகாப்பு பணி:

மாவட்டத்தில் மொத்தம் 1496 காவலர்கள் தேர்தல் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். முன்னாள் படை வீரர்கள், ஓய்வு பெற்ற காவலர்கள், ஹோம் கார்ட்ஸ் 551 நபர்களும், என்.எஸ்.எஸ். மாணவர்கள் 900 என 1451                                      காவலர் அல்லாதவர்கள் பணிகளில் ஈடுபடுத்தப் பட்டுள்ளனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here