கும்பகோணம், ஜூன். 25 –
கும்பகோணம் அருகே உள்ள திருபுவனத்தில் நகர அதிமுக சார்பில் வைக்கப்பட்டிருந்த தண்ணீர் பந்தல் பேனரில் உள்ள ஓபிஎஸ் மற்றும் வைத்தியலிங்கம் படத்தை கிழித்து இபிஎஸ் ஆதரவாளர்கள் மூன்றாம் புரட்சித்தலைவர் இபிஎஸ் வாழ்க என முழக்கமிட்டனர்.
திருவிடைமருதூர் தாலுகா திருபுவனம் கடைவீதியில் அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் உச்சத்தில் இருக்கும் நிலையில் எடப்பாடி பழனிச்சாமியின் ஆதரவாளர்கள் திருபுவனம் நகர அதிமுக சார்பில் அமைக்கப்பட்டிருந்த கோடைக்கால தண்ணீர் பந்தலில் ஓபிஎஸ், இபிஎஸ் மற்றும் வைத்திலிங்கம் உள்ளிட்ட தலைவர்களின் படம் இருந்தது.
திருபுவனம் பேரூராட்சி அதிமுக நகர செயலாளர் சிங்.செல்வராஜ் தலைமையில் அதிமுக நிர்வாகிகள் தண்ணீர் பந்தலில் வைக்கப்பட்டிருந்த விளம்பர போர்டில் இருந்த ஓபிஎஸ் வைத்திலிங்கம் படம் ஆகியவற்றை கிழித்து கீழே போட்டு எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவாக ஓபிஎஸ் ஒழிக ஒழிக என்று முழக்கங்கள் எழுப்பியும், மூன்றாம் புரட்சித்தலைவர் இபிஎஸ் வாழ்கவென முழக்கமிட்டனர்.