பொன்னேரி, ஜூன். 29 –

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் அமைந்துள்ள தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் நம் நாட்டு இன வண்ண மீன்களின் உற்பத்தி குறித்து ஒருநாள் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் முதல்வர் அகிலன். பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர். உள்ளிட்டோர் தலைமை வகித்தனர். கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் டி.ஜே. கோவிந்தராஜன் ‌.மற்றும் மூத்த அதிகாரிகளும் பொன்னேரி நகராட்சியின் தலைவர் பரிமளம் விஸ்வநாதன் உள்ளிட்டோர்கள் முன்னிலை வகித்தனர்.

இதில் சிறப்பு அழைப்பாளராக மீன்வளம் மீனவ நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கலந்துகொண்டு நிகழ்ச்சியினை குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தார்.

இதில் பொன்னேரி வட்டாரத்தைச் சேர்ந்த 30 வண்ண மீன்களின் பண்ணையாளர்கள் மற்றும் பயனாளிகளும் இதில் பங்கேற்றனர் அவர்களுக்கு நலத்திட்ட உதவிகளை மீன்வளத்துறை அமைச்சர் வழங்கினார்.

புதிதாக அமைக்கப்பட்ட  பண்ணை வளாகத்தை சுற்றிப் பார்த்தவர் திலேபியா மீன் குஞ்சுகளை வெளியிட்டார். .மேலும், அவர் பேசுகையில்  நம்நாட்டு வண்ண மீன்களின் உற்பத்தியை ஊக்கப்படுத்துவது முக்கியத்துவத்தையும். பழவேற்காடு முகத்துவாரம். மீனவர்களின் வாழ்வாதாரம் மற்றும் மீன்வளக் கல்லூரியில் மாணவர்களின் எண்ணிக்கை அதிகப்படுத்துவது குறித்தும் பேசினார்.

இந்நிகழ்வில், மீஞ்சூர் ஒன்றிய பெருந்தலைவர் அத்திப்பட்டு சோழவரம் ஒன்றிய கழக செயலாளர் செல்வசேகரன் மீஞ்சூர் நகரத் செயலாளர் உள்ளிட்ட திரளான மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் மீன் பண்ணைகளில் உரிமையாளர்கள் என 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here