ராமநாதபுரம், ஜூலை 7-
குறைகூறியே மக்களை திசை திருப்ப இனி ஒரு காலமும் இடம்தரமாட்டோம் என்பதில் மண்ணின் மைந்தர் மிகவும் கவனமாக இருந்து ராமநாதபுரத்தில் இரண்டு நாட்கள் மின்வினியோகம் தடைபட்டுவிட்டது. இதை அரசியல் ஆக்கும் நோக்கத்தில் பலரும் பார்த்தீர்களா என ஆளாளுக்கு பேசத்துவங்கினர். ஆனால் மின்வாரியத்தில் ஏற்பட்ட டெக்னிக்கல் பிரச்னை. இதையும் அரசியலாக்கி ஆளும்கட்சிக்கு எதிராக திசை திருப்ப பார்த்தனர். ஆனால் விடுவாரா நம் மண்ணின் மைந்தர் சென்னையில் இருந்தவருக்கு ராமநாதபுரத்தில் மின்தடை  என்பதை அறிந்த உடன் சட்டசபையில் இருந்தவர் ஓடோடி ராமநாதபுரம் வந்து மாவட்ட நிர்வாகத்தையும் மின்வாரிய அதிகாரிகளையும், ஊழியர்களையும் திரட்டி கொண்டு தானும் நேரடியாக களத்தில் இறங்கி உடனடி தீர்வு கண்டு மின்வினியோகத்தை சீர்செய்து இனி தடை வராது அதற்காக புதிய துணை மின்நிலையம் அமைக்க போகிறோம் என கூறியுள்ளார்.

ஒவ்வொரு கூட்டத்திலும் தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் டாக்டர் மணிகண்டன் மண்ணின் மைந்தருக்கு வாய்ப்பு தாருங்கள் உங்கள் குறைகளை ஓடோடி வந்து பார்ப்பார்கள் என தனது தொண்டை வறண்டு போக பேசிவந்தார். அவரது பேச்சை கேட்காமல் லோக்சபாவில் மக்கள் ஏமாற்றிவிட்டனர். அப்படி இருந்தும் மண்ணின் மைந்தர் சற்றும் சளைக்காமல் மக்கள் பணிக்காக இன்னும் ஓடோடிகொண்டு இருக்கிறார்.
கடந்த சில தினங்களாக சென்னையில் சட்டசபை நடந்து கொண்டிருந்த நேரத்தில் ராமநாதபுரத்தில் இரண்டு நாட்கள் திடீரென மின்வினியோகம் தடைபட்டுவிட்டது. மின் அதிகாரிகளே மின்தடைக்கு காரணம் தெரியாமல் அங்கும்மிங்கும் ஓடி எப்படியாவது மின்தடையை சரிசெய்துவிடலாம் என இரவு பகல் பாராமல் மின் ஊழியர்கள் கடுமையாக உழைத்தனர். ஆனாலும் தொய்வு நீடித்தது. இத்தகவல் நமது மண்ணின் மைந்தரான தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் டாக்டர் மணிகண்டன் காதிற்கு எட்டியது. நமது மண்ணில் மின்சாரம் இன்றி மக்கள் இருளில் உள்ளனரா என மனம் துடித்து உடனடியாக சென்னையிலிருந்து விரைந்து வந்து வீட்டிற்கு கூட செல்லாமல் மாவட்ட நிர்வாகத்திடம் தொடர்பு கொண்டு மின்தடைக்கு என்ன காரணம் என ஆலோசனை நடத்தினார்.

களத்தில் இறங்கினார் மண்ணின் மைந்தர் அமைச்சர்:

ராமநாதபுரமே இரண்டு நாட்கள் இருளில் தவித்து மக்கள் இரவில் துாங்கவில்லை என்ற தகவல் கேட்டு துயரப்பட்ட மண்ணின் மைந்தர் ஒட்டமொத்த மின்வாரிய அதிகாரிகள், பொறியாளர்கள், போர்மேன்கள், லைன்மேன்கள், கடைநிலைய ஊழியர்கள், தீயணைப்பு வீரர்கள் அனைவரையும் வரவழைத்து ஒவ்வொரு துணை மின்நிலையமாக மின்வாரிய அதிகாரிகள் ஊழியர்களுடன் நேரில் சென்று என்ன பிரச்னை உடனடியாக கண்டுபிடியுங்கள் என அதே இடத்தில் முகாமிட்டு பணியை முடுக்கிவிட்டார். அமைச்சர் விடமாட்டார் என்பதை அறிந்தவுடன் மின்வாரிய அதிகாரிகளும், பொறியாளர்களும் ஓய்வின்றி உணவின்றி கடுமையாக பணியாற்றி மின்தடைக்கான காரணங்களை அறிந்து மின் அழுத்த பாதையில் உள்ள இன்சுலேட்டரில் உண்டான பாதிப்பை கண்டறிந்து மின்தடையை போக்குவதற்கான முழு வீச்சில் தமிழ்நாடு மின்சார வாரியம், மற்றும் மின்பகிர்மான கழக அலுவலர்கள் முழுவீச்சில் பணியாற்றி சீர் செய்து உடனடியாக மின்சாரம் தடையின்றி ராமநாதபுரத்திற்கு கிடைக்க வழிசெய்தனர்.
இதன் பின் அமைச்சர் கூறியதாவது: இனி ராமநாதபுரத்தில் மின்தடை பிரச்னை இருக்காது. இருப்பினும் பட்டணம்காத்தான் பகுதியில் ரூ.ஒரு கோடி மதிப்பில் புதிய மின் துணைநிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். மக்கள் பிரச்னை என்றால் எந்நேரம் என்றாலும் நான் வந்து தீர்வு கண்டுவிடுவேன், மக்கள் அச்சப்பட வேண்டாம், என்றார்.
மாவட்ட ஆட்சித்தலைவர் வீரராகவ ராவ், மின்வாரி உயர் அதிகாரிகள் உடன் இருந்தனர்.
மின்தடையை போக்க அமைச்சர் தீவிர நடவடிக்கை எடுத்தது மக்கள் மத்தியில் நல் வரவேற்பை பெற்றது. 

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here