ராமநாதபுரம், ஜூலை 7-
ராமநாதபுரம் மாவட்டத்தில் இனி மின் வினியோக பிரச்னை இருக்காது, ராமநாதபுரம் பட்டணம்காத்தானில் ரூ. ஒரு கோடி மதிப்பில் புதிய துணை மின் நிலையம் விரைவில் அமைக்கப்படும் என தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் டாக்டர் மணிகண்டன் தெரிவித்தார்.
ராமநாதபுரம் மாவட்டம்  புதிய பஸ் ஸ்டாண்ட் வளாகத்தில்  தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறையின் சார்பாக தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் டாக்டர் மணிகண்டன் பொது மக்கள் பயன்பாட்டிற்காக 30 புதிய பஸ்களை கொடியசைத்து துவக்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் வீரராகவ ராவ் தலைமை வகித்தார்.
தமிழ்நாடு முதலமைச்சர் சென்னையில் நடைபெற்ற விழாவில் போக்குவரத்து துறையி் சார்பாக பொது மக்கள் பயன்பாட்டிற்காக தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்திற்கு 500 புதிய பஸ்களை துவக்கி வைத்தார். அவற்றில் காரைக்குடி மண்டலத்திற்கு 30 பஸ்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக ராமநாதபுரம் மாவட்டத்திற்கு 15 பஸ்கள் ஆகும்.
ராமநாதபுரம் மாவட்டத்திற்கான 15 புதியய பஸ்களை அமைச்சர் மக்கள் பயன்பாட்டிற்காக துவக்கி வைத்தார்.
புதிதாக துவுக்கி வைக்கப்பட்டு்ளள இப்பஸ்கள் ராமநாதபுரம்-மதுரை வழித்தடத்தில் 2, ஏர்வாடி-மதுரை வழித்தடத்தில் 1, ராமேஸ்வரம்-மதுரை வழித்தடத்தில் 4, ராமேஸ்வரம்-திருச்சி வழிதடத்தில் 1, சாயல்குடி-மதுரை வழித்தடத்தில் 1, கமுதி-மதுரை வழித்தடத்தில் 2 , பரமக்குடி-திருச்சி வழித்தடத்தில் 4 பஸ்கள் வீதம் 15 பஸ்கள் இயக்கப்படுகின்றன.
அதன்படி ராமநாதபுரம் மாவட்டத்தில் 2018 ஜூலை முதல் இன்று வரை மொத்தம் 92 புதிய பஸ்கள் மக்கள் பயன்பாட்டிற்காக துவக்கி வைக்கப்பட்டுள்ளன.
இதன்பின் அமைச்சர் டாக்டர் மணிகண்டன் செய்தியாளர்களிடம் கூறும்போது, ராமநாதபுரத்தில் ஏற்பட்ட மின்தடை போர்கால அடிப்படையில் துரிதமாக செயல்பட்டு பழுதுநீக்கம் செய்து தற்போது தடையின்றி மின்வினியோகம் வழங்கப்படுகிறது. விரைவில் ராமநாதபுரம் பட்டணம்காத்தான் பகுதியில் ரூ. ஒரு கோடி மதிப்பில் புதிய துணை மின்நிலையம் அமைக்கப்பட உள்ளது. மேலும் ராமநாதபுரம் மாவட்டத்தில் உற்பத்தியாகும் சோளார் மின் உற்பத்தி, வழுதுார் இயற்கை எரிவாயு மின் உற்பத்தி இவைகள் முதலில் ராமநாதபுரம் மாவட்ட மக்களுக்குத்தான் பயன்படுத்தப்படும். உபரிதான் வெளிமாவட்டங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது. எனது அயராத தீவிர முயற்சியில் ராமநாதபுரம் மாவட்டத்திற்கு மருத்துவ கல்லுாரி கொண்டு வந்தே தீருவேன். இதில் எந்தளவும் சந்தேகம் வேண்டாம்.
இவ்வாறு அமைச்சர் டாக்டர் மணிகண்டன் பேசினார்.
இந்நிகழ்ச்சியில் பரமக்குடி எம்எல்ஏ சதன்பிரபாகர், மைக்கேல்பட்டிணம் கூட்டுறவு தலைவர் முனியசாமி, அரசு போக்குவரத்து கழக துணை மேலாளர்கள் சிவலிங்கம் (வணிகம்), லலங்கிள்ளி (கோட்டம்), போக்குரவத்து கிளை மேலாளர்கள் பத்மகமார், ரவி உ்பட பலர் பங்கேற்றனர். 

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here