திருத்துறைப் பூண்டி, மே. 07 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் அம்பிகாபதி …
திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி தாலுகா, சேகல் மடப்புரம் கிராமத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீ காடுவாளம்மன் அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் 12 ஆம் ஆண்டு சித்திரைத் திருவிழாவின் தீமிதி திருவிழா அவ்வூரில் வெகுச்சிறப்பாக நடைபெற்றது.
மேலும் அத்தீமிதி திருவிழாவில் திரளான பக்தர்கள் கலந்துக் கொண்டு காப்புக்கட்டி விரதமிருந்து தீ குழி இறங்கி தங்களது வேண்டுதலை நிறைவேற்றினார்கள்.
முன்னதாக அம்மனுக்கு அபிஷேக ஆராதனை மற்றும் தீபாராதனைக் காட்டப்படு அம்மன் வீதியுலா நடைப்பெற்றது. அதில் அக்கிராம மாவிளக்கு போடுதல், காவடி எடுத்தல் போன்றவைகளை செய்து வேண்டுதலை நிறைவேற்றினார்கள்.
அதனைத் தொடர்ந்து வானவேடிக்கை அன்னதானம் மற்றும் இரவு கலை நிகழ்ச்சிகள் என அவ்விழா வெகு அமர்க்களமாக நடைபெற்று வந்தது. அவ்விழாவின் முக்கிய நிகழ்வாக நான்காம் நாளானயின்று தீமிதி திருவிழா நிகழ்ச்சி நடைப்பெற்றது. அதனை அவ்வூர் என் எஸ் எஸ் சுப்பையன் அண்ணா குடும்பத்தினர் அந் நிகழ்ச்சிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்திருந்தனர்.
மேலும் அவ்விழா வெகுச்சிறப்பாக நடைப்பெறுவதாற்காக சேகல் மடப்புரம் பகுதி கிராமவாசிகள், கிராம முக்கியஸ்தர்கள் என அனைத்து தரப்பு மக்களும் முன்னின்று வெகுச் சிறப்பாக செய்திருந்தனர்.