கவரைப்பேட்டை, மார்ச்.05 –

தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சீனிவாசன்

திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி ஒன்றியம், கவரப்பேட்டை, மற்றும் ஆந்திர மாநிலம் தடா மண்டலம் ஊயப்பன் நகரிலும் இந்திய குடிமக்கள் சமூக நல அறக்கட்டளை இயங்கி வருகிறது.

இந்நிலையில், அவ் அறக்கட்டளையின் சார்பில் தமிழகம் மற்றும் ஆந்திர மாநில பகுதிகளில் பொருளாதார ரீதியாக நலிந்த நிலையில் உள்ள ஏழை-எளிய மக்களுக்கும், கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் பொருளாதார ரீதியில் பாதிப்படைந்தவர்கள்   உள்ளிட்டவர்களுக்கு பல்வேறு வகையான நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகின்றனர்.

இந்நிலையில், தடா மண்டலம் தொண்டூர், எஸ்.டி காலனியில் 200 பழங்குடி இன மக்கள் நலிந்த நிலையில் வாழ்ந்து வருகின்றனர். அவர்களுக்கு உதவிடும் வகையில் அறுசுவை உணவு மற்றும் பெண்களுக்கு குங்குமம்  உள்ளிட்ட மங்களப் பொருட்கள், மற்றும் பள்ளி மாணவர்களுக்கு எவர்சில்வர் தட்டு, எவர்சில்வர் டப்பா, நோட்டு, பேனா,சிலேட், பென்சில்,பல்பம் உள்ளிட்ட நலத்திட்ட உதவி பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு இந்திய குடிமக்கள் சமூக நல அறக்கட்டளையின் தேசியத் தலைவர் நளினிமாயா தலைமை தாங்கினார். தேசிய செயலாளர் ப்ரியா, துணைத் தலைவர் ஆர்.தேவராஜ், கே.எல்.பிரசாத் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்நிகழ்ச்சியில், பார்த்திபன், சாந்தி, புஷ்பவள்ளி, புத்தி விஜயலட்சுமி, கார்த்திகேயன், திவாகரன், செங்கையா, லட்சுமி, ஆர்த்திக்ராஜ், பி.ராஜேஷ், ரவி, சசி, எம்.சுரேஷ், வினோத்குமார், குமரன், சந்துரு உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இதில் பேசிய அறக்கட்டளையின் தேசிய தலைவர் நளினி மாயா இதுபோன்று வாழ்வாதாரம் இழந்து பரிதவித்து வரும் பழங்குடி இன மக்களுக்கு தங்களால் முடிந்த உதவிகளை செய்து வருவதாகவும், படிக்கின்ற மாணவர்களுக்கு கல்வி சார்ந்த உதவிகளை செய்வதாகவும், அதுமட்டுமின்றி உடல்நிலை சரியில்லாத நபர்களும் தங்களை நாடினால் மருத்துவ சார்ந்த உதவிகளையும் செய்ய தயாராக உள்ளதாகவும், மேலும் எந்த பகுதியில் இருந்தும் தங்களுக்கு உதவி தேவைப்படுகிறது என்று அழைத்தால் தாங்கள் அறக்கட்டளையின் சார்பில் அவர் அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்ய தயாராக உள்ளோம் என்று மற்றவர்களுக்கு செய்யும் உதவி கிடைக்கும் நிம்மதி வேறு எதிலும் இல்லை என்று அவர் தெரிவித்தார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here