தஞ்சாவூர், மார்ச்.23 –

தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு

தஞ்சாவூரில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநிலக் குழுக் கூட்டம் நடைபெற்றது. அக்கூட்டத்தில் சங்கத்தின் மாநிலத் தலைவர் பெ. சண்முகம் அளித்த பேட்டியில் மத்திய ஆட்சி அதிகாரத்தில் 2014 முதல் 10 ஆண்டுகாலமாக உள்ள பாஜக தலைமையிலான அரசு, தேர்தல் காலத்தில் விவசாயிகளுக்கும், மக்களுக்கும் கொடுத்த வாக்குறுதிகளை இதுவரை நிறைவேற்றாமல் விவசாயிகளை வஞ்சித்து வருகிறது.

அதனால் நாட்டில் உள்ள அனைத்து தரப்பு மக்களும் இனிமேல் வாழ்க்கை நடத்த முடியாத அளவுக்கு அனைத்து அத்தியாவசிய பொருட்களின் விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது. உரம் உள்ளிட்ட வேளாண் இடுபொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. அரிசி உள்ளிட்ட வேளாண் பொருட்களுக்கு ஜி.எஸ்.டி. விதித்து விலைவாசி தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

விவசாயிகள் உற்பத்தி செய்யும் விளைரி பொருட்களுக்கு எம்.எஸ். சுவாமிநாதன் குழு பரிந்துரை அடிப்படையில் குறைந்தரி பட்ச ஆதார விலையை வழங்குவோம் என்ற மோடி அரசு இதுவரை வழங்கவில்லை. விவசாயிகளின் வருமானத்தை இரு மடங்காக உயர்த்துவோம் எனக் கூறிய பிரதமர் மோடிதான் இந்திய நாட்டு விளை நிலங்களையும், விவசாயிகளையும் கார்ப்பரேட் நிறுவனங்களின் கொத்தடிமைகளாக மாற்றக் கூடிய மூன்று வேளாண் சட்டங்களைக் கொண்டு வந்தார்.

எனவே, தமிழ்நாடு, புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து வாகன பிரசாரம், விவசாயிகளின் வீடுகளுக்குச் சென்று துண்டறிக்கைகளை வழங்குவது, அரங்கம் கூட்டம் நடத்துவது போன்ற களப் பணி மேற்கொள்வது என முடிவு செய்யப் பட்டுள்ளதாக அச்சங்க தலைவர் சண்முகம் தெரிவித்தார்..

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here