திருவாரூர், ஏப். 05 –

சைவ சமயத்தின் தலைமைபீடமாகவும், கோவில்களின் கோவில் எனவும், சைவ சமய குறவர்களால் பாடல் பெற்றதுமான  வரலாற்று சிறப்பு வாய்ந்த ஆலயம் திருவாரூர் ஸ்ரீதியாகராஜ சுவாமி ஆலயம்.

மேலும் பல்வேறு சிறப்புகளைக்கொண்ட இவ்வாலயத்தின் வருடாந்திர பங்குனி உத்திர பெருவிழா கடந்த மார்ச் 9ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.

மேலும், அத்திருவிழாவின் முக்கிய நிகழ்வான பங்குனி உத்திர ஆழி தேரோட்டம் கடந்த ஏப்ரல் ஒன்றாம் தேதியன்று அந்நகரம் குலுங்கும் வகையில் பக்தர்களின் திரள் கூட்டத்துடன் வெகு விமர்சையாக நடைபெற்றது. மேலும் அதனைத்தொடர்ந்து, அடுத்த நாட்களில் தீர்த்தவாரியும் நடந்து முடிந்தது..

இந்நிலையில், திருவாரூர் தியாகராஜர் கோவிலில் தற்போது பங்குனி உத்திர நாளான இன்று அத்திருத்தலத்தில் தியாகராஜர் பாத தரிசன நிகழ்ச்சி வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது. மேலும் இத்திருக்கோயிலில் தியாகராஜர் ஆண்டுதோறும் தனது முகத்தை மட்டுமே அருள்பாலித்து வந்த நிலையில் பக்தர்களுக்கு ஆண்டுக்கு இருமுறை தனது திருவடியான பாதத்தை காட்டி அருள் பாலிக்கும் இந்நிகழ்ச்சி சிறப்பு மிக்கதாக பக்தர்களால் கருதப்படுகிறது. மேலும் அச்சிறப்பு மிக்க அப்பாதத்தை கண்டால் அனைத்து பாவங்களும் தீர்ந்து புண்ணியங்கள் சேரும் என்பதும் ஐதீகமாக இத்திருத்தலத்தில் இருந்து வருகிறது.

மேலும், மார்கழி மாதம் திருவாதிரை நன்னாளில் தனது இடது பாதத்தையும், பங்குனி மாதம் பங்குனி உத்திர நன்னாளில்  தனது வலது பாதத்தையும், திருவாரூர் தியாகராஜர்  பக்தர்களுக்கு காண்பித்து அருள்பாலித்தார்.

மேலும் இன்று இந்நிகழ்வு விடியற்காலையில் தொடங்கி மாலை வரை நடைபெற உள்ளது. பாத தரிசனத்தை காண பக்தர்கள் அதிகாலை முதல் நீண்ட வரிசையில் நின்று அப்பாத தரிசனம் கண்டு உளம் மகிழ்ந்து வருகின்றனர்.

மேலும் இந்நகரில் பிறக்க முக்தி தரும் ஸ்தலமாகவும் இத்திருத்லம் திகழ்ந்து வருகிறது. மேலும் திருவாரூரில் அருள்பாலித்து வரும் ஸ்ரீதியாகராஜ சுவாமி, சிவாலயங்களில் எங்கும் காணமுடியாத நிகழ்வாக மார்கழி மாதம் திருவாதிரை நட்சத்திர நாளில் ஆரூத்ரா தரிசனம் அன்றும், பங்குனி மாதம் உத்திர நட்சத்திர தினத்திலும் வருடத்திற்கு இரண்டு முறை மட்டுமே தனது பொற்பாதங்களை பக்தர்களுக்கு காண்பித்து அருள்பாலித்து வருவபதென்பது மேலும் இத்திருத்தலத்தின் சிறப்பாகும்.

மேலும், அதன்படி பங்குனி உத்திர நட்சத்திர தினமான இன்று ஸ்ரீதியாகராஜ சுவாமி சபாபதி மண்டபத்தில் எழுந்தருளி தனது வலது பாதத்தினை பக்தர்களுக்கு காண்பித்து அருள்பாலித்து வருகிறார்.  காலை 6 மணிக்கு தொடங்கிய பாததரிசனம் மாலை 3 மணி வரை நடைபெறுகிறது.

மேலும் இப்பாத தரிசன விழாவில் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்திருந்து நீண்ட வரிசையில் நின்று ஸ்ரீதியாகராஜ சுவாமியின்  பொற்பாதத்தை கண்டு வழிபட்டு வருகின்றனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here