திருவள்ளூர், ஏப். 16 –

தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன் ..

திருவள்ளூர் அருகே அரசு மண் குவாரியில் இருந்து ஊராட்சி  பூங்காவிற்கு சவுடு மண் வழங்கி பூங்காவை சீர் செய்ய வேண்டுமென  மாவட்ட ஆட்சியரிடம் தொழுதூர் ஊராட்சிப் பகுதி பொது மக்கள் மனு அளித்தனர்.

திருவள்ளூர் மாவட்டம், தொழுவூர் ஊராட்சிக்குட்பட்ட லட்சுமி நகரில் அம்மா விளையாட்டு பூங்கா அமைந்துள்ளது, இந்த பூங்காவை தொழுவூர் கிராம பொதுமக்கள் மட்டுமல்லாமல் அருகில் உள்ள கிராம மக்களும்  தினந்தோறும் பயன்படுத்தி வருகின்றனர்.

மேலும் இங்கு சிறு பிள்ளைகள் விளையாடுவதற்கு வாலிபால்கள் திடல், இளைஞர்கள் உடற்பயிற்சி செய்வதற்கும், பெரியோர்கள் நடைபயிற்சி செய்வதற்கும், கராத்தே மற்றும் யோகா வகுப்புகள் உள்ளிட்ட உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான அனைத்து வித பயன்பாட்டிற்கும் அப்பூங்க பயன்பாட்டில் இருந்து வருகிறது.

இந்நிலையில் மழைக்காலங்களில் மழை நீர்  தேங்குவதால் பொதுமக்கள் பூங்காவை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டு வருவதாகவும், மேலும் பூங்காவில் தேங்கி நிற்கும் தண்ணீரால் டெங்கு போன்ற நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளதால்   இந்த விளையாட்டுப் பூங்காவை உடனடியாக சீரமைத்து தருமாறு 100 க்கும் மேற்பட்ட தொழுவூர் கிராம பொதுமக்கள்  திருவள்ளுவர் மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கரிடம் மனு வழங்கிவுள்ளனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here