கும்பகோணம், மே. 08 –

கும்பகோணம் மாதுளம்பேட்டை மகாமாரியம்மன் மற்றும் காளியம்மன் திருக்கோவில் சித்திரை பெருவிழாவின் முக்கிய நிகழ்வாக இன்றிரவு நடைப்பெற்ற உற்சவர் சுவாமிகள் திருவீதிவுலா, காளித்திருநடனம், பல்வேறு சாமிகள் வேடமணிந்த வேடதாரிகள் கேரள செண்டை மேளம் முழங்க முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக அழைத்து வரப்பட்டனர்.

கும்பகோணம் மாதுளம் பேட்டை பகுதியில் பிரசித்தி பெற்ற மகா மாரியம்மன் மற்றும் காளியம்மன் திருக்கோயில் அமைந்துள்ளது ஆண்டுதோறும் இக்கோயிலில் சித்திரைப் பெருந் திருவிழா சிறப்பாக நடைபெறும். அது போல இவ்வாண்டும் இவ்விழா கடந்த 24ம் தேதி காப்பு கட்டுதலுடன் துவங்கியது நாள்தோறும் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வந்தது.

இந்நிலையில் விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக இன்றிரவு, காளி திருநடனத்துடன், உற்சவர் பாவிகளான மகா மாரியம்மன் மற்றும் மகா காளி அம்மன் சிறப்பு மலர் அலங்காரத்தில் வீதி உலா வர அவர்களுக்கு முன்பாக யானையும் அவர்களைத் தொடர்ந்து பரமசிவன் பார்வதி விநாயகர் முருகன் ராமர்,லட்சுமணர், சீதாதேவி, காத்தவராயன் ஆரியமாலா வேடமணிந்த வேடதாரிகள் கேரள செண்டை மேளம் முழங்க சிறப்பு வாகனங்களிலும் யானை மீதும் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக கோவிலுக்கு அழைத்து வரப் பட்டனர். என்பது குறிப்பிடத்தக்கது இந்நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டு அம்மன் தரிசனம் செய்து மகிழ்ந்தனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here