சென்னை, ஏப். 20 –

தமிழ் சின்னத்திரை நடிகர் அர்ணவ் மற்றும் நடிகை திவ்யா ஆகியோர் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில், கணவர் தன்னை அடித்து சித்ரவதை செய்வதாக போரூர் எஸ்.ஆர்.எம்.சி. அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதனைத்தொடர்ந்து அக்காவல் நிலையத்தில் அர்ணவ் மீது மூன்று பிரிவுகளில் வழக்கு பதிவுசெய்யப்பட்டது. இந்நிலையில் அர்ணவ் தன் மீதான வழக்கை ரத்து செய்யக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

மேலும் அம்மனுவில் அவர் திவ்யாவை காதல் திருமணம் செய்து வாழ்ந்து வந்த நிலையில், மற்றொரு நடிகையுடன் தனக்கு தொடர்பு இருப்பதாக பொய் குற்றச்சாட்டுக் கூறி திவ்யா தன்னுடன் அடிக்கடி சண்டையிட்டதாகவும் அதில் தெரிவித்துள்ளார். மேலும் தான். திவ்யாவை  தாக்கியதாகக் கூறுவது பொய் என்றும், அவர்தான் தன்னை துன்புறுத்தியதாகவும் அம்மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் திவ்யா தன்னை துன்புறுத்தியது தொடர்பாக நான் கொடுத்த புகார் மீது எவ்வித நடவடிக்கையையும் அக்காவல் நிலையத்தில் எடுக்கப்படவில்லை எனவும், மேலும் தனக்கு எதிராக திவ்யா கொடுத்த புகார் மனு மீது மட்டும் உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு வழக்கு பதிவு செய்து உள்ளதாகவும் அம்மனுவில் மேலும் தெரிவித்துள்ளார்.

மேலும் இம் மனுக் குறித்த வழக்கு நீதிபதி ஜி.சந்திரசேகரன் முன்பு விசாரணைக்கு வந்தது.  காவல்துறை தரப்பில் வழக்கறிஞர் சந்தோஷ் ஆஜராகினார். மேலும் அவர் நீதிமன்றத்தில் வாதிடும் போது, திவ்யாவின் உடலில் ரத்த காயங்கள் இருப்பதற்கான மருத்துவ ஆவணங்களை தாக்கல் செய்தார். தொடர்ந்து அர்ணவ் மீதான வழக்குகளை ரத்து செய்யக்கூடாது எனவும் வாதிட்டார்.

அதனைத்தொடர்ந்து, அர்ணவ் மீதான குற்றச்சாட்டுகளுக்கு முகாந்திரம் இருப்பதாகவும், மேலும் அதுக்குறித்து முழுமையாக விசாரணை நடத்த வேண்டியிருக்கும் என்பதால், தற்போதைய நிலையில் வழக்கை ரத்து செய்ய முடியாது எனக்கூறி, தமிழ் சின்னதிரை நடிகர் அர்ணவ்வின் மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here